‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (16.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை – காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை – அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒரு அனைத்துலக நாடுகளுக்கும் இனப் பிரச்சினை விவகாரத்தில் தலையிடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒருபோதும் இடமளியாது எனவும் சூளுரைத்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து யுத்தத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களும் என மூன்றாவது தொகுதியினர் , சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்பட்டு நேற்றிரவு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலை தகவல்களின்படி நோயாளர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் உறவினர்களும் என சுமார் 420 பேர் மூன்றாவது தடவையாக அழைத்து வரப்பட்டுள்ளனர் .குறிப்பாக இவர்களில் காயமடைந்தவர்களுக்கு உடனடியான அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவர்களில் 125 பேர் சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர நேற்று பொலன்னறுவை வைத்தியசாலைக்கு 58 பேரும், கந்தளாய் வைத்தியசாலைக்கு 83 பேரும் வைத்தியசாலையில் நிலவும் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மாற்றப்பட்டுள்ளார்கள்.மேலும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு 16 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இரு தொகுதிகளில் அழைத்து வரப்பட்ட சுமார் 700 பேரில் தற்போது 242 பேரே திருகோணமலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மூன்றாவது தொகுதியினர் நேற்றிரவு அழைத்து வரப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து வவுனியாவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் நோயாளர்கள் வவுனியா மணிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

முல்லைத்தீவு புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் சுமார் 700 நோயாளர்களைத் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களில் சிகிச்சை பெற்றவர்களே அங்கிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயாளர்கள் மணிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் இயங்கி வந்த யோகர் சுவாமிகள் வயோதிபர் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 65 வயோதிபர்களை இராணுவத்தினர் வவுனியாவுக்கு அழைத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது வவுனியா மன்னார் வீதி பம்பைமடுவில் உள்ள அன்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்த மோதல்கள், எறிகணை வீச்சுக்கள் காரணமாக வன்னேரியில் இருந்து புதுமுறிப்புக்கு இடம்பெயர்ந்து சென்ற இந்த வயோதிபர் இல்லம் , அங்கிருந்து கல்மடு, பின்னர் மயில்வாகனபுரம் பாடசாலை ஆகிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றது. பின்னர் சுதந்திரபுரத்தில் தற்காலிகக் கொட்டிலில் இல்லம் இயங்கி வந்தது .சுதந்திரபுரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து, வயோதிபர்கள் இராணுவத்தினரால் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். பட்டாணிச்சூர் இடைத்தங்கல் முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக இல்லத்தின் தலைவர் பொ.நித்தியானந்தன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் , அப்போது அவர்களில் ஒருவர் உயிர் துறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 9 பேர் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் பம்பைமடுவில் உள்ள வயோதிபர் மற்றும் ஆதரவற்றோருக்கான அன்பகம் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

அன்பகம் இல்லத்திற்கு இவ்வாறு பெருந்தொகை வயோதிபர்கள் சேர்க்கப்பட்டதையடுத்து. அந்த இல்லத்திற்குத் தேவையான மேலதிக தேவைகள், உதவிகள் என்வற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு வவுனியா அரசாங்க அதிபரின் முயற்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் இடம் பெயர்ந்து வந்துள்ள மக்கள் நிறைந்து வழிவதையடுத்து , இடைத்தங்கல் முகாம்களாக மாற்றப்பட்டுள்ள பதினான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியைத் தொடர மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார் .

இந்த நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இந்த மாணவர்கள் அனைவருக்கும் கல்வியைத் தொடர்வதற்கான முழுமையான வசதிகளை மேற்கொள்ள முடியாத போதிலும் , கல்விப்பொதுத் தராதரம், உயர்தரம் மற்றும் ஆண்டு ஐந்து ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாற்றிடங்களில் வகுப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே வேளை, ஏனைய மாணவர்கள் சுயமாகக் கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில் பாடக்குறிப்புக்களைத் தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக விசேட பயிற்சிகளை ஆசிரியர்கள் அதிபர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பிரித்தானிய பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை இங்கு அனுப்புவது தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது . பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலி பேன்ட்டுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் இடையில் நேற்று மீண்டும்தொலைபேசியூடான உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போதே இவ்விவகாரம் குறித்து கலந்தாலோசிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வொன்றை ஏற்படுத்தும் நோக்கிலும், இனிவரும் காலங்களில் இந்த நாடுகளுக்கிடையே முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் ரீதியாக நடவடிக்கைகள் குறித்தும், இந்த உரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசாங்கம் உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கொண்டுவராவிடில் அதன்மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதோடு இலங்கை விவகாரம் குறித்துப் பாதுகாப்புச் சபையில் பிரேரணையும் கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனிடம் அந்நாட்டு மத நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.
போர் நிறுத்தத்தை கொண்டு வந்து , இலங்கையின் வடக்கே சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான மக்களை ஐ.நாவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவும் சேர்ந்து வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்றும் வெளியுறவுச் செயலா ளரிடம் கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யு.எஸ் அட்வகசி, தேவாலயங்களின் தேசியக் கவுன்ஸில், அமெரிக்க அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் ஆகியன இணைந்து வெளியுற வுச் செயலாளரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன . நேற்று திங்கட்கிழமை ஹிலாரிக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில் மிரி யாம் யங் , வண. கலாநிதி போல் எவ். ஜான், வண. கலாநிதி மைக்கேல் கின்னாமன் ஆகி யோர் ஒப்பமிட்டுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற் படுத்தும் நோக்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னையும் சந்தித்துப் பேச்சு நடத்தத் தாம் திட்டமிட்டுள்ளார் என்று வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கொல்கத்தா வில் வைத்து செய்தியாளர்களிடம் :
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு சமாதானம் மலரவேண்டும். அதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பேச்சில் ஈடுபட வேண்டும்.
இந்த விடயத்தில் சமாதானத் தூதுவரா கச் செயற்பட்டு அவர்கள் இருவரையும் தனித்தனியே சந்தித்துப் பேச நான் தயாராகவுள்ளேன்.நான் சமாதான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். அதை நான் தொடர்ந்து செய்வேன். நான் சமாதானத் தூதுவராக விரைவில் பாகிஸ்தானுக்கும் செல்ல வாய்ப்புகள் உண்டு.
அதேபோல், நான் இலங்கைக்கும் சமாதானத் தூதுவராகச் செயற்பட விரும்புகிறேன். யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் இந்திய மற்றும் இலங்கை அரசுகளிடம் வேண்டுகேள் விடுத்துள்ளேன் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!
2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டதில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என உலக பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்க்கு அச்சுறுத்தலான நாடுகளில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது கடந்த வருடம் ஈராக்கில் மாத்திரம் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த எண்ணிக்கை கடந்த 2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 44ஆக இருந்த ஊடகவியலாளர்களின் உயிரிழப்புக்கள் 14ஆகக் குறைவடைந்துள்ளது என அந்த அமைப்பு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் ஈராக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் வீதியோரக் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரியர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக விசாரணைக்குட் படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
இன்று திங்கக்கிழமை உதயன், சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 6 மணித்தியாலம் தடுத்து வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட பிரிவிற்கமைய இந்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு புலனாய்வுப் பிரிவினரால் வித்தியாதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

வன்னியில் கொல்லப்படுகின்ற மக்கள் படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் என்பவற்றினால் கொல்லப்படுவதாக செய்திகளை வெளியிட்டமை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உரை பிரசுரிக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடனான உறவுநிலை போன்ற விடயங்கள் விசாரிக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உதயன் சுடரொளி பத்திரிகை நிறுவனம் மற்றும் பத்திரிகையாளர்கள் பத்திரிகை உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு பாரிய அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதும் சிலர் கொல்ப்பட்டு சிலர் கடத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் ரி.தனபாலசிங்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற உரையொன்று தொடர்பில் வெளியான செய்தி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி தொடர்பில் நாடாளுமன்ற குறிப்பேட்டுடன் ஆராய்ந்து பார்க்குமாறு புலனாய்வுதுறையினரிடம் தனபாசிங்கம் கூறியுள்ளார்.அதில் எதுவும் தவறு இருந்தால் அதற்கு தான் பொறுப்பு எனவும் தனபாலசிங்கம் புலனாய்வுதுறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளை வெளிக் கொணரும் தமிழ் மற்றம் ஆங்கல பத்திரிகைகளின் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்களை மற்றும் ஊடக நிறுவனங்களை அண்மைக்காலமாக இலக்கு வைத்து தாக்குதல் நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினரின் உரை தொடர்பான செய்திகள் பிரசூரிக்கப்பட்டமை தொடர்பாக இரு பிரதான செய்தி ஆசிரியர்களிடமும் விசாரிக்கப்பட்டுள்ளமை சிங்கள அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களின் அவலங்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கையை முற்றாக ஒடுக்கும் செயற்பாடுகள் இதுவென அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய அரசு, தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டிருக்கும் சிறிலங்காவுக்கு செய்து வரும் உதவிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் இலங்கையில் நடக்கும் இன அழிவிலிருந்து அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றுமுகமாக போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்ப்படுத்தக் கோரியும் 18-02-09 புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 2 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்முன்னெடுக்கப்படவுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
INDIA NEWS

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை கண்டித்து சென்னையில் இன்று நடத்துவதாக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தள்ளிவைத்துள்ளது. .

இது தொடர்பாக அதன் தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :- ஈழத்தமிழர்கள் போராட்டத்தை இழிவுபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கண்டித்து இன்று மெமோரியல் அரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தோம் .

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தருவதாக உறுதி அளித்திருந்த காவல்துறை அதிகாரிகள் நேற்றிரவு 11 மணிக்கு திடீரென அனுமதி மறுத்து நோட்டீஸ் கொடுத்து விட்டனர். அனுமதி கிடைக்க வில்லை என்பதாலும், தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களாலும் இன்று நடத்துவதாக இருந்த ஆர்ப் பாட்டத்தை தள்ளிவைத்திருக் கிறோம் என்று வெள்ளையன் கூறியுள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!
த‌மிழக ‌நி‌தி‌‌நிலை அ‌றி‌க்கையை ‌நி‌தி அமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் வா‌சி‌ப்பத‌ற்கு மு‌ன்பாக அ.இ.அ.‌தி.மு.க., ம.‌‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் அவை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.

தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌2009-10-ம் ஆண்டுக்கான நி‌தி‌நிலை அ‌றி‌க்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9.29 மணிக்கு அமைச்சர் அன்பழகன் பட்ஜெட் உரையுடன் அவை‌‌க்குள் வந்தார். 9.30 மணிக்கு அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் தனது இருக்கைக்கு வந்தார்.

‌பி‌ன்ன‌ர் அமைச்சர் அன்பழகனை ‌நி‌தி‌‌நிலை தாக்கல் செய்யும் படி அழைத்தார். அப்போது அ.இ.அ.‌தி.மு.க. எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி துணை‌த் தலைவ‌ர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து நின்று ஒரு அறிக்கையை வாசித்தார்.

உடனே அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமைச்சர் அன்பழகன் ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை வா‌சி‌க்க‌த் தொடங்கியதும் அ.இ.அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அவ‌ர்களுட‌ன் ம.‌‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்களு‌ம் வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தன‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்ட விரோதமாகவும், வன்முறைச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் வகையிலும் பேசுவோர் மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அறைகூவல் விடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌‌மிழக அரசு அ‌‌றிவ‌ி‌த்து‌ள்ளது.

2009-10ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டப் பேரவையில் இன்று தா‌க்க‌ல் செ‌ய்த நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் , மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும், மதநல்லிணக்கத் திற்கும் பாதிப்பு ஏற்படாமல் இந்த அரசு தொடர்ந்து விழிப்புணர்வுடன் பணியாற்றி வருகிறது எ‌ன்றா‌ர்.

அண்டை மாநிலங்களிலிருந்து தமி‌ழ்நாட்டிற்குள் தீவிரவாதம் ஊடுருவுவதற்கான முயற்சிகள் அனைத்தும் காவல்துறையின் திறன் மிக்க நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளன எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்ட விரோதமாகவும், வன்முறைச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் வகையிலும் பேசுவோர் மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அறைகூவல் விடுப்போர் மீது இந்த அரசு தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கும் எ‌ன்று அ‌ன்பழக‌‌ன் கூ‌றினா‌ர்
!!!!!!!!!!!!!!!!
தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் இருந்துவரும் இலங்கை அகதிகள் மறுவாழ்விற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார் .

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியது. அப்போது , அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனையடுத்து, 2009-2010 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது, மருத்துவக் காப்பீடு திட்டம், பயிர்க் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைத் திட்டங்களை அவர் அறிவித்தார். இலங்கை அகதிகள் மறுவாழ்விற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அன்பழகன் தெரிவித்தார். தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்காத முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படும் அணியுடன், பாமக இணைந்து செயல்படுவதால், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கோபமடைந்துள்ளதாகவும், இதனால், ராமதாஸ் டெல்லி விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள், இரு அணிகளாகப் பிரிந்து குரல் கொடுத்து வருகின்றன. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், திக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்றன. இந்த பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்து மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணி அமைத்து, போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த அணியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவும் இடம் பெற்றுள்ளது. இதனிடையே, மக்களவைத் தேர்தலில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்கபாலு மற்றும் சுதர்சனம் ஆகியோருடன் சோனியாகாந்தி டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, சென்னையில் நேற்று ராமதாசை, சுதர்சனம் சந்தித்துப் பேசினார் . அப்போது, மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் பாமக தொடர்வது குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து, வரும் மார்ச் முதல் வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துமாறு சோனியாவிடம் வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த இரு ஆண்டுகளாக நடந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக இந்தியன் முகாஜிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 21 பேர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டு டெல்லி, அகமதாபாத் , பெங்களூரு மற்றும் சூரத் நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன .

இது தொடர்பாக, மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மும்பையில் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இந்தியன் முகாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த இரு ஆண்டுகளாக நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அவர்களே காரணம் என்பதும் தெரியவந்தது.

உத்தரபிரதேச மாநிலம் அஸாம்கர் பகுதியை சேர்ந்த அவர்கள், மும்பையில் தங்கியிருந்த இதற்கான சதித்திட்டங்களை தீட்டியதும் தெரியவந்தது.

இந்த கும்பலில், மென்பொருள் பொறியாளர் ஒருவரது தலைமையில் பத்திரிகை தொடர்பு பிரிவும் செயல்பட்டு வந்துள்ளது.

அந்த பிரிவினர், வெடிகுண்டு தாக்குதல் நடந்தவுடன் இதுகுறித்து அனைத்து ஊடகங்களுக்கும் ‘இ-மெயில்’ மூலம் செய்தி அனுப்பியுள்ளனர் .

இந்த ‘இ-மெயில்’கள் மும்பையில் மாட்டுங்கா மற்றும் செம்பூர் பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்டதும் தற்போதும் தெரியவந்துள்ளது.

அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் நியூமும்பை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து , இந்தியன் முகாஜிதீன் அமைப்பை சேர்ந்த 21 பயங்கரவாதிகள் மீதும் மகாராஷ்டிர மாநில குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (MCOCA) இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

இதுதவிர, ஆயுதங்கள் பதுக்கல், வெடிகுண்டுகள் பதுக்கல், சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொடர்பு சட்டம் ஆகியவற்றின் கீழும் குற்றச்சாட்டுக்கள் பதிவுச் செய்யப்படவுள்ளன.

!!!!!!!!!!!
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மாநிலங்களவையில் இன்று உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். விசாரணை முறையாக நடைபெற்று வருவதாக கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா தெரிவித்துள்ளார்.

சத்யம் நிறுவன மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான விவாதம் இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது . அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வழக்கு விசாரணை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களைத் தெரிவித்தனர். ஆனால், விவாதத்தின்போது பேசிய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா, சத்யம் நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணை, முறையாக நடைபெற்று வருவதாகக் கூறினார். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
!!!!!!!!!!!!!!!
அமெரிக்க தேர்தலில், அந்நாட்டு மக்கள், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதைப் பார்த்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், சுமார் 40 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு குடும்பத்தின் ஆட்சிதான் நடைபெற்று வருவதாகக் கூறினார். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு குடும்பம், ஒரு கட்சி என்ற நிலையே இருந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அண்மையில், அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு அந்நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் , அமெரிக்கர்களிடம் இருந்து இந்தியர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான், இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் சோ, இலங்கைத் தமிழர்கள் மீது பாஜகவிற்கு திடீர் பாசம் ஏற்பட்டுள்ளதாக கிண்டல் செய்தார். விடுதலைப்புலிகள் பற்றி சோ ஆங்கிலத்தில் பேசியபோது அவையில் சிலர் கூச்சலிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

world
தெற்கு சீன பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு குறைந்தது 62 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 மாகாணங்களிலிருந்து மக்கள் தங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மழை வெள்ளத்திற்கு குவாங்டாங் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் 20 பேர் பலியானதாகவும், 17 நகரங்களில் உள்ள 57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன .

குவாங்டாங்கில் உள்ள ஸீஜியாங் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வீதிகளும் , சாலைகளும் வெள்ளத்தில் மூ‌ழ்கியுள்ளன.

மழை மேலும் நீடித்தால் இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று சீன அரசுத் துறை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே மே 12 ம் தேதி பூகம்ப இழப்புகளிலிருந்தே இன்னமும் மீளாத நிலையில் அதே பகுதிகளில் தற்போது ஏற்பட்டு வரும் வெள்ளங்களால் மட்டும் 1.5 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 45,000 வீடுகள் அழிந்துள்ளன.மேலும் 140,000 வீடுகள் சேதமடைந்துள்ளன
!!!!!!!!!!!!!!!!!
மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளைக் காப்பாற்ற பாகிஸ்தான் அரசு முயற்சி மேற்கொள்ளக்கூடாது என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப் வலியுறுத்தி உள்ளார்.

மும்பையில் தாக்குதல் நடத்தியது தமது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், தமது நாட்டில், அதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அண்மையில் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. இதுதொடர்பாக 6 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், அமெரிக்க பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் . அதில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து, உலகத்தை ஏமாற்றும் வகையில் எந்தவொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தான் அரசு ஈடுபடக் கூடாது என்று தெரிவித்துள்ளார் . பாகிஸ்தான் மக்கள் அனைவரும், தீவிரவாதத்திற்கு எதிராக இருப்பதாகவும், எனவே, மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றவோ அல்லது அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கவோ முயற்சிகள் எடுக்கக் கூடாது என்றும் அந்த பேட்டியில் முஷாரப் கூறியுள்ளார். தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
!!!!!!!!!!!!

பயங்கரவாதத்துக்கு எதிராக உலகெங்கும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை குலைத்துவிட்டதாக, அந்த நடவடிக்கைகளின் விளைவுகள் குறித்து மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
பயங்கரவாதம் குறித்த அச்சத்தை பயன்படுத்தி பல நாடுகள் சித்திரவதை, விசாரணையற்ற தடுத்துவைப்பு , சட்டவிரோதமாக காணாமல் போகச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளன என்று சர்வதேச நீதிவல்லுனர் ஆணைக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
சர்வதேச மனித நேயச் சட்டங்கள் நிரந்தரமாகவே பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு, யதேச்சதிகாரத்துடனான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான, ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான முன்னாள் ஆணையரான மேரி றொபின்சன் தெரிவித்துள்ளார் .
!!!!!!!!!!!!
அமெரிக்காவின் புதிய அரசுத்துறைச் செயலரான ஹிலாரி கிளிங்டன் அவர்கள் தனது முதலாவது அதிகாரபூர்வ வெளிநாட்டு விஜயமாக டோக்கியோ சென்றடைந்துள்ளார்.
ஜப்பானில் இருந்து அவர், இந்தோனேசியா, தென்கொரியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.
தான் தோல்வியுற்ற அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளருக்கான தேர்தலின் போது, அமெரிக்காவுக்கும் , சீனாவுக்குமான உறவுகள் இந்த நூற்றாண்டில், உலகிலேயே நாடுகளுக்கிடையிலான உறவில் மிகச்சிறப்பானதாக இருக்கும் என்று அவர் எழுதியிருந்தார்.
ஆசிய தலைவர்களுடனான அவரது பேச்சுவார்த்தைகள், உலக நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம் , வடகொரிய அணுத்திட்டம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம் ஆகியவை குறித்ததாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
!!!!!!!!!!
sport
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மக்காரோவாவை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறியுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் பட்டாயா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ரஷ்ய வீராங்கனையிடம் சானியா மிர்சா தோல்வியடைந்தார். எனினும், ஏடிபி புள்ளிகளால் மொத்தம் 39 இடங்கள் முன்னேற்றம் அடைந்து , 87வது இடத்தை சானியா பிடித்துள்ளார். இதனிடையே, துபாயில் இன்று நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா, ரஷ்ய வீராங்கனை மக்காரோவாவை எதிர்கொண்டார். இதில், 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனையைத் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு சானியா முன்னேறியுள்ளார்.
1 euro = 144.20 sl /62.26in
1us $ =114.13sl / 49.28in
1swiss fr =97.16sl /41.96in
1uk pound =162.04sl / 69.97in
1 saudi arabian riyal =30.43sl /13.13in

Leave a Reply

Your email address will not be published.