பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் போர்நிறுத்த அறிவிப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் இருக்கின்ற ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக போரிட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாதிகள் பத்து நாள் போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்து அமைதி ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படலாம் என கூறியுள்ளனர்.

அதிகாரிகளுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் அனுகூலமாக இருந்ததாக தீவிரவாதிகள் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஐந்து மாத காலத்திற்கு முன்பு கடத்திய சீன பொறியாளர் ஒருவரை நல்லெண்ண அடிப்படையில் விடுவித்துள்ளதாக தீவிரவாதிகள் அறிவித்த பின்னர் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கும் தீவிரவாதிகள், இந்த பகுதியில் கடும் மோதல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.