மத்திய இடைக்கால பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார் : வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை

புதுடில்லி : ஐ.மு., கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முழு அளவில் முயற்சிகள் எடுக்கப்படும் என பட்ஜெட்டை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசினார். நிதித்துறையை கவனிக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 11 மணிக்கு பார்லிமென்டில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது * கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்ளை அமல் படுத்த ஐ.மு. கூட்டணி அனைத்த முயற்சிகளையும் எடுத்தது *பட்ஜெட் தாக்கலில் நிதி பற்றாக்குறை 2.7 சதவீதமாக இருக்கும் * வேளாண் உற்பத்தி 23 கோடி டன்னாக அதிகரிப்பு * பணவீக்க விகிதம் 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது * தனி நபர் வருமானம் சராசரியாக 7.4 சதவீதம் அதிகரிப்பு * 2009ல் உலக பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் * இந்தியா இந்த பொருளாதார பிரச்னையை திறம்பட சமாளித்துள்ளது* பொருளாதார பின்னடைவால் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 17.1 சதவீதம் சரிவு * நாட்டின் சேமிப்பு விகிதம் 30.7 சதவீதமாக உயர்ந்துள்ளது * 3240 கோடி டாலர் அன்னிய முதலீடு

வேலை வாய்ப்பை பெருக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை * 65,300 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது * மாணவர்களுக்கான கல்வி கடன் உயர்த்தப்பட்டது * 6 புதிய ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டது போன்ற கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த பிரணாப் எடுத்துரைத்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் போது உறுப்பினர் ஒருவர் உடல் நலக் குறைவால் மயங்கி விழுந்ததால் அவை 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.