ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் “சிலிக்கான் சிட்டி” பெங்களூரில் அய்.டி பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்ற ஓர்குட் இணையத் தள குழுவின் இளையோர் மற்றும் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் சார்பாக இந்தியாவின் “சிலிக்கான் சிட்டி” பெங்களூரில் ஒரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.


இலங்கை அரசின் இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய அரசு தொடர்ந்து இலங்கைக்கு அரசுக்கு செய்த ஆயுத மற்றும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் தலையிட்டு அப்பாவி ஐக்கிய நாடுகள் தலையிட்டு அப்பாவி தமிழர்களை படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரூ. மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக ஒரு கவன ஈர்ப்பு அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

திரு. கை.அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திரு. வேல்முருகன், திரு.வெங்கடேசன்,திரு.தமிழன்பன், திரு.நிலவன், திரு.தமிழ்நிலவன், திரு.சக்திவேல் உள்ளிட்ட அய்.டி பொறியாளர்கள் கலந்துக் கொண்டனர்.ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் இன்னல்களை விளக்கும் நிழற்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பொறியாளர் நம்மிடம் பேசியபோது , காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நாட்டையே ஆண்டுள்ளனர். இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங் கை பிரதமராக வைத்து அழகுப் பார்க்கும் காங்கிரஸ் கட்சி, ராஜீவ் கொலை என்ற வீண்பழியை சுமத்தி ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தையும் அழிக்கிறதே! தனிமனித உயிரிழப்பிற்காக, ஒரு இனத்தையே உலக வரைப்படத்திலிருந்து அழிக்கும் வேலையைத்தான் இந்திய அரசு செய்கிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போராட்டம் பிறமாநிலத்தவரிடம் பெரியஅளவில் ஆதரவை பெற்றது. ஈழம் சார்பில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பது என்று உலக தமிழ்மக்கள் அரங்கம் முடிவினை எடுத்திருக்கிறது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.