‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (14.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான செனட் சபை இலங்கை விவகாரங்கள் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் நாள் கூடி ஆராய உள்ளதாக அதன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான செனட் சபை எதிர்வரும் 24 ஆம் நாள் கூடி ஆராய உள்ளது. இந்த கூட்டத்திற்கு வெளிவிவகார குழுவின் தலைவர் செனட்டர் கெரி தலைமை வகிப்பார்.

இந்த கூட்டத்தில் சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கா தூதுவர் ஜெப்ஃரி லுன்ஸ்ராட்,
மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த அன்னா நெஸ்ராற், ஊடகவியலாளர் பாதுகாப்பு
அமைப்பைச் சேர்ந்த பொப் டைற்ஸ் ஆகியோர் பங்குபற்ற உள்ளனர் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!

வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும்
தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா
படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

தனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே போரினால் அவலப்பட்டு வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை, கருக்கலைப்பு செய்து
கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றி கருக்கலைப்புக்கு உடன்பட
வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில பெண்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதி விண்ணப்ப படிவங்களில் வற்புறுத்தி
கையொப்பமிட வைக்கப்பட்ட பின்பு கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும்
தெரியவருகின்றது.

நிம்மதி இல்லாமையாலும், நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதாலும், ஏமாற்றப்பட்டதாலும் பல
பெண்கள் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்து கொண்டு விட்டதாக அந்த மருத்துவ அதிகாரி
தெரிவித்தார்.

சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு
உட்பட்டு செயற்பட வேண்டியிருப்பதால் தமிழர்களாக இருந்துகொண்டே இளம் தமிழ் சந்ததி ஒன்றை அழிக்கும் வேலைக்கு துணை போக வேண்டி இருப்பதாக வவுனியா மருத்துமனை தமிழ் மருத்துவ அதிகாரிகள் பலர் வேதனைப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!

இலங்கையின் வன்னியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும், மனித அவலங்கள் குறித்து,
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அரசியல்வாதியான நிட்டா மெக்லோவி தமது கவலையை
வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தம்
ஒன்றுக்கு முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போர் காரணமாக சுமார் இரண்டரை இலட்சம் மக்கள்
பாரிய இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே அவர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உரிய முறையில்
விநியோகிக்கப்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!

மத்திய மாகாண சபையின் நுவரெலிய மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 146,418 வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களைக்
கைப்பற்றியுள்ளது.

அதேவேளை ஐக்க்ய தேசியக் கட்சி 128,289 வாக்குகளைப்பெற்று 7 ஆசனங்களையும், மக்கள்
விடுதலை முன்னணி 3039 வாக்குகளைப்பெற்றும் ஆசனங்கள் எவற்றையும் கைப்பற்றாதுள்ளது.
அளிக்கப்பட்ட 309,666 வாக்குகளில் 282,819 வாக்குகள் செல்லுபடியானவையாகவும், 26,847
வாக்குகள் நிராகரிக்கப்பட்டுமுள்ளன.

!!!!!!!!!!!!!!!!!!!!

மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான எஸ்.பி.
திஸாநாயக்க வாக்களிக்கவில்லை. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததே இதற்கு
காரணமாகும்.

இதேவேளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரட்ன கம்பளையில் உள்ள வாக்களிப்பு
நிலையம் ஒன்றில் நாடாளுமன்ற அடையாள அட்டையை காட்டி வாக்களிப்பதற்கு வாக்களிப்பு நிலைய
அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து அமைச்சர் ஜயரட்ன வீட்டில் இருந்த தனது தேசிய அடையாள அட்டையை பாதுகாப்பு
அதிகாரிகள் மூலம் தருவித்து வாக்களித்து சென்றுள்ளார்

!!!!!!!!!!!!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடல் மூலம்
தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் சிறிலங்கா படையினரின்
புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை
தளங்களை நிறுவியுள்ளதாக “லக்பிம” வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக “லக்பிம” ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்
வருமாறு:

சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடல்
மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை
எச்சரிக்கையினை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் பரப்பளவு குறைந்து வருவதனால் 57 ஆவது படையணியையும்
பின்னிருக்கை படையணியாக பேணுவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த படையணி விசுவமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளது.

புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியில் 59 மற்றும் 53 ஆவது டிவிசன்களும், நடவடிக்கை
படையணி – 04 மற்றும் நடவடிக்கை படையணி – 08 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு
வருகின்றன.

ஏ-36 நெடுஞ்சாலையின் வடபகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகின்றன.

புதுக்குடியிருப்புக்கு தென்புறம் உள்ள பாதுகாப்பு படையினரின் நிலைகளை ஊடறுத்து
காடுகளுக்குள் உட்புகுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம். அது நிறைவேறினால் இராணுவம்
பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிறிலங்கா படையில் மேலும் ஒரு புதிய டிவிசன் ஒன்றை உருவாக்குவதற்கு தரைப்படைத் தளபதி
முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில்
மேலும் தெரிய வருவதாவது:

சிறிலங்கா படையில் மேலும் ஒரு டிவிசனை உருவாக்குவதற்கு தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா
முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். நடவடிக்கை படையணி – 08 எனப்படும் இந்த படையணி இரு
பிரிகேட்டுக்களை கொண்டது.

59 ஆவது படையணி மற்றும் நடவடிக்கை படையணி – 04 என்பன விடுதலைப் புலிகளின் கடுமையான
எதிர்த்தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தரைப்படைத் தளபதி இந்த முடிவை
எடுத்துள்ளார்.

இதன் கட்டளைத் தளபதியாக கேணல் ஜி.வி.ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்த படையணி
முல்லைத்தீவு வாவிக்கு கிழக்குப்புறம் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது

!!!!!!!!!!!!

இந்திய தொழிலதிபரான என்.ஆர்.நாராயணமூர்த்தி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த
ராஜபக்சவின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் பெறுகின்றார். நாராயணமூர்த்தியின் இந்தச்
செயலானது பெரும் அதிர்ச்சி அலைகளை அரசியல், வர்த்தக, நிதித்துறை வட்டாரங்களில்
தோற்றுவித்துள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய “இன்ஃபோசிஸ்” நிறுவனத்தின் தலைவர்
என்.ஆர்.நாரயணமூர்த்தி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தகவல் தொழில்நுட்ப
ஆலோசகராகச் செயற்படுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாராயணமூர்த்தி உருவாக்கிய “இன்ஃபோசிஸ்” நிறுவனம் இன்று அனைத்துலக அளவில் புகழ்பெற்று
விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகினாலும்,
தொடர்ந்தும் இயக்குநர் குழுவில் ஒருவராக அவர் விளங்குகின்றார

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த
கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு நாராயணமூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த மாநாட்டில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் தந்தை
என்று அழைக்கப்படும் நாராயணமூர்த்தியின் ஒத்துழைப்பைப் பெற்று முன்னேற சிறிலங்கா அரசு
முடிவு செய்துள்ளது என அறிவித்தார்.

“இது விவகாரமான நிறுவனப் பங்களிப்புக்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும்,
சிறிலங்கா அரசு – “இன்ஃபோசிஸ்” நிறுவன வர்த்தக உடன்படிக்கையே” இது என கொழும்பு ஆய்வாளர்
ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழினப் படுகொலைப் போரின் அதிகரித்த செலவீனம் மற்றும் தவறான கையாடல்கள் காரணமாக
சிறிலங்கா அந்நிய செலவாணி பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் வேளையில் – இவ்வாறாக மனித
நேயங்களை புறக்கணித்து, இந்திய தொழில் அதிபர்களும், தொழில் நிறுவனங்களும் சிறிலங்காவில்
முதலீடு செய்து வருவது விசனத்திற்குரியது என தமிழக தொழில்நுட்பவியல் வட்டாரங்களைச்
சேர்ந்த ஒருவர் புதினத்தின் சென்னை செய்தியாளரிடம் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, பொதுமக்களை பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனமாகிய “இன்ஃபோசிஸ்” (நியூயோர்க்
பங்கு சந்தை குறியீடு INFY) அதன் இயக்குனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியுடன்
கூட்டிணைந்து, தமிழின அழிப்பில் ஈடுபடும் சிறிலங்கா அரசுடன் கை கோர்த்து நிற்பதனை உலகு
எங்கும் வாழும் பங்குதாரர்கள் நல்ல விதமாகப் பார்க்கமாட்டார்கள் என வர்த்தக-நிதித்துறை
வட்டாரங்கள் சில கருத்து வெளியிட்டன.

!!!!!!!!!!!!!!!!!!!!!

சிறிலங்கா படையினர் New;W சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித்
தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 79 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்
172 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

“அன்புச்சோலை மூதாளர் பேணலக”த்தின் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய
பீரங்கித் தாக்குதலில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 4 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்
5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வள்ளி ஆச்சி (வயது 99)

கறுப்பையா (வயது 101)

பொன்னம்மா (வயது 80)

இளையபிள்ளை (வயது 86)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

வேலாச்சி (வயது 97)

செல்லையா (வயது 98)

பழனி (வயது 79)

கிருஸ்ணன் (வயது 80)

இராஜேஸ்வரி (வயது 67)

பராமரிப்பாளரான கருணாகரன் (வயது 35)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிக்குள் இருந்த அன்புச்சோலை மூதாளர் பேணலகம்
மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்
என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி
தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!

வன்னியில் செல் வீச்சுகளினால் காயமடைந்த பொதுமக்களின் இரண்டு குழுவினர் திருகோணமலைக்கு
அழைத்துவரப்பட்ட பின்னர், திருகோணமலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக திருகோணமலை வைத்தியசாலைப் பகுதியில் வெளியார் பாரிய சோதனைகளுக்கு
உட்படுத்தப்படுகின்றனர்.அத்துடன் சைக்கிள்கள் யாவும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பாடசாலை மூடப்பட்டு அங்கு வன்னியில் இருந்து காயப்பட்டு
அழைத்து வரப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

!!!!!!!!!!!!!!!!

வன்னியிலிருந்து காயப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை பார்வையிட்ட ஒரே குடும்பத்தை
சேர்ந்த நால்வர் திருமலையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை பார்வையிடச்செல்பவர்கள் புகைப்படமெடுக்கப்படுகின்றனர். இதனால்
பார்வையிடச்செல்வதில் உறவினர்கள், நண்பர்கள் அச்சமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் திருமலை வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை ச் சேர்ந்த
நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும், இக்குடும்பத்தினை சேர்ந்த ஒருவர் தொழில் நிமித்தம்
வெளியில் சென்றிருந்ததால் தப்பித்துக்கொண்டதாக தெரியவருகிறது.

மேலும் காயமடைந்தவர்களுடன் உதவிக்கு வந்த 20க்கும் மேற்பட்டோர் வவுனியா இடைத்தங்கல்
முகாமுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தெரியவந்துள்ளத

!!!!!!!!!!!!!!!!

சிறிலங்காவினால் வன்னியில் இருந்து இராணுவக் கட்டப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களுக்கென
அமைக்கப்பட்டுள்ள வவுனியா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 190 ஆண்கள் படையினரால்
படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 130 பெண்கள் படையினரின் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, வவுனியாவில் இருந்து எமக்கு கிடைக்கப் பெற்ற
தகவல்களின் அடிப்படையில் அங்கு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமான முறையில்
அநுராதபுரம் கொண்டு சென்று எரிக்கப்பட்டுள்ளன.

வெளியுலகத்திற்கு தெரியக்கூடாது என்பதற்காகவே அவர்களது உடல்கள் எரித்து
அழிக்கப்பட்டுள்ளன.

சர்வதேசத்தின் கண்காணிப்பு இல்லாமல் இயங்கும் இந்த தடுப்பு முகாம்களில் இடம்பெறும்
படுகொலைகள் யூகோசிலாவியில் இடம்பெற்றவை போன்றவை.

ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பிரிக்கும் படையினர் இவ்வாறான கொடுமைகளைப்
புரிகின்றனர். அத்துடன், யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற 90 பேர் காணாமல்
போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்கள் சிறிலங்கா
இராணுவத்தின் பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்குமாறு வற்புறுத்தி வரும் நிலையில் அவ்வாறு
வரும் மக்களுக்கு நிகழும் கொடூரம் சொற்களில் வடிக்க முடியாதவையாக இருக்கின்றன.

சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக அந்த மக்களை யாரும் சந்திக்க முடியாதபடி ஹிட்லரின்
ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற, இனப்படுகொலைக் கொடுமையைப்போன்று தடுப்பு முகாம்களில்
தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைத்து கொடூரங்களைப் புரிந்து வருகின்றது சிறிலங்கா.
ஆனால், சர்வதேசம் மெளனமாக வேடிக்கை பார்க்கின்றது.

!!!!!!!!!!!!!!!

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்களின் நலன்
குறித்து மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வன்னிப் பிராந்திய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்
ஜகத் ஜெயசூரிய மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ்
ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்களின் நிலைமை
தொடர்பில் ஆராய்வதற்காக மன்னார் மறைமாவட்ட ஆயர் வவுனியாவுக்கு நேற்று முன்தினம்
வெள்ளிக்கிழமை சென்றவேளையிலேயே இச் சந்திப்புகளை மேற்கொண்டார்.

வன்னிப்பிராந்திய கட்டளைத் தளபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வன்னியிலிருந்து
இடம்பெயர்ந்து வந்துள்ள பொதுமக்களின் பராமரிப்பு மற்றும் நலன்கள் குறித்தும் அவர்களது
எதிர்காலம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் 1
1/2 மணிநேரம் நீடித்தது. இதன் போது மடுதேவாலயத்துக்கு யாத்திரிகர்கள் சென்று வருவதற்கு
வசதியாக தற்போதுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி வசதி செய்யுமாறு ஆயர் வன்னி இராணுவத்
தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது ஆயருடன் மடுதேவாலய பரிபாலகர் அருட்திரு. எஸ்.எமிலியானுஸ்பிள்ளை,
இயேசு சபை அகதிகள் பணியின் தேசிய இயக்குநர் அருட்திரு.கமால் அன்ராடியும்
கலந்துகொண்டனர்.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணிக்கு ஆயர் வவுனியா மாவட்ட அரச அதிபர்
திருமதி பி.எம். எஸ்.சார்ள்ஸை சந்தித்து இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள
மக்களுக்கு திருச்சபை ஆற்றக்கூடிய பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்கான முகாம்களுக்குரிய ஏற்பாடு,உணவு,சுகாதாரம் ஆகியவற்றில்
எவ்வாறு திருச்சபை ஒருங்கிணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளத

!!!!!!!!!!!!!

கடவுச்சீட்டில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வத்தளையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்
ஒருவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் வழக்கு விசாரணை முடிவில்
குற்றவாளியாகக்கண்டு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடகால சிறைத்தண்டனை
விதித்தார். அத்துடன் அபராதமாக 3000 ரூபாவும் விதிக்கப்பட்டது.

ஒருவருடத்துக்கு முன்னர் குவைத் சென்று பணிப்பெண்ணாக பணியாற்றிய இவர், 2004 அக்டோபர்
மாதம் 31 ஆம் திகதி நாடுதிரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவரது
கடவுச்சீட்டை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் பரிசீலித்த போது அதில் மோசடி
செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது
செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குடிவரவு, குடியகல்வு சட்ட விதிகளின் கீழ் இவர் மீதான குற்றச்சாட்டு
நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றம் மேற்படி தண்டனையை விதித்தது.

!!!!!!!!!!

இலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுவிக்க
பிரித்தானியாவின் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன்
அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி, இலண்டனிலுள்ள சிங்கள மக்களால் ஒரு
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தின் காரணமாக, இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள்,
முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் ஆகிய அனைத்து மக்களும் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர்
என்றும், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை
நடத்திவரும் இராணுவத்துக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு விடுதலைப் புலிகள் தான்
காரணம் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய பயங்கரவாத்த்துக்கு எதிரான அமைப்பின்
உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

!!!!!!!!!!!!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள ஆயுதப் பிரிவை கலைப்பதற்கு தயாராகி
வருவதாக அக் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்
கூறுகின்றார்.

இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பு உட்பட ஏனைய அதிகாரிகளுடன் எற்கனவே பேச்சுவார்ததைகள்
ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.இருப்பினும் கால எல்லை பற்றி எதிர் வரும் புதன்
கிழமை பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கபப்டும் என்றும்
தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள்
குறைவடையும் போது ஆயுதங்களைக் ஒப்படைப்போம் என்று கூறியிருந்தோம்.பெரிய அளவில்
ஆயுதங்கள் எம்மிடம் இல்லை .இருப்பினும் எம்மிடமிருக்கும் அனைத்து ஆயுதங்களையும்
ஒப்படைப்போம் .ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்பு எமது உறுப்பினகளுக்கு பல்வேறு தொழில்
துறைகளில் பயிற்சி மற்றும் வேலை வாயப்பு தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்ததைகளை
நடத்தியிருக்கின்றோம் .

தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறைந்துள்ளமையே இந்த முடிவு எடுப்பதற்கு பிரதான
காரணமாகும் .அதனை விட ஆயுதங்களை தொடர்ந்து வைத்திருப்பதால் வேறு பிரச்சினைகள்
எழுகின்றது. மக்கள் எம் மீது நம்பிக்கை இழக்கின்றார்கள்.இதன் காரணமாக முழுமையாக
ஜனநாயகத்தில் ஈடுபட்டுள்ளதை உறுதிபப்டுத்த வேண்டிய தேவை இருப்பதால் விரைவாக ஆயுதங்களை
ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.அப்போது தான் மக்கள் எம் மீது நம்பிக்கை
வைப்பார்கள்.ஆயுதங்களை ஒப்படைக்கும் போது நூறு வீதம் ஜனநாயக கட்சியாக நாம் மாற முடியும்
இருந்தும் ஜனநாயகத்திற்கு வந்த கட்சி என்ற அடிப்படையில் மக்கள் எம் மீது கொண்டுள்ள
நம்பிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை உளள்து அதற்கமைய வேலைத்திட்டங்களை
முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அது மட்டுமல்ல எமது உறுப்பினர்களும் தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி
இயல்புவாழ்க்கைக்கு திரும்ப வேண்டியுள்ளது.இந்த முடிவானது அழுத்தங்கள் காரணமாக
எடுக்கப்பட்ட முடிவு அல்ல” எனவும் அவர் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!

india

மனித சங்கிலிப் போராட்டத்தை போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில்
நடத்திட வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்
கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிப்ரவரி 17 மாலை மனிதச் சங்கிலி
போராட்டம் நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்பவர்கள் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். சாலையின் ஒருபுறமாக கைகோர்த்து நிற்க வேண்டும்.

தமிழகத்தின் வடக்கே தாம்பரத்தில் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி,
நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி வரையிலும், மேற்கே கோவையில் தொடங்கி
திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம், நாகை
வரையிலும், கிழக்கு கடற்கரையோரமாக புதுவையில் தொடங்கி கடலூர், சிதம்பரம், சீர்காழி,
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், நாகை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை,
பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கடலாடி, தூத்துக்குடி வரையிலும் மனிதச் சங்கிலி
போராட்டம் நடைபெறும்.

இந்த 3 பாதைகளிலும் இடம் பெறாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் அவரவர் ஊர்களில் மனிதச் சங்கிலி
போராட்டம் நடத்தலாம் என்று அவர் கோரியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும்,
எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இருகட்சிகளிலும் கிளை
அளவில் தொண்டர்கள் முடுக்கிவிடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. .
தற்போதைய நாடாளுமன்றம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு
ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய அளவில் தேர்தலுக்கு முக்கிய
கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி ஆகியவை ஆயத்தமாக உள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை,
வேட்பாளர் தேர்வு என அக்கட்சிகள் மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

!!!!!!!!!!!

சென்னையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உளவுப்படையினர் ஊடுருவி யிருப்பதாகவும், இதனால்
தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்ப தாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
எச்சரித்திருக்கிறார். .
இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்ய கட்டளையிடுமாறு சோனியா காந்தியிடம் தமிழகத்தைச்
சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் வலியுறுத்த வேண்டும்
என்றும் அவர் கேட்டு கொண்டிருக்கிறார்.

!!!!!!!!!!!!!

மதுரையில் New;W காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழ்த்து அட்டைகளை எரிக்க
முயன்ற சிவசேனா கட்சியைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் காதலர் உருவ
பொம்மைக்கு பாடை கட்டி கொண்டு செல்ல முயன்ற சுமார் 100 பேரும் கைது செய்யப்பட்டனர். அதே
சமயம் காதலர் தினத்துக்கு ஆதரவாக துண்டறிக்கைகளை வினியோகித்து ஆர்ப்பாட்டம் நடத்திய
தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பைச்சேர்ந்த 12 பேரும் கைது செய்யப்பட்டனர். .
காதலர்தின கொண்டாட்டம் இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது என்று கூறி அதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காதலர் தின வாழ்த்து அட்டைகள் எரிப்பு போராட் டத்தில்
தமிழ் மாநில சிவசேனா கட்சியினர் இன்று மதுரையில் ஈடுபட்டனர்.

மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு பக்கத்தில் இதற்காக
அக்கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் எம்.நாராயணன், விருதுநகர் மாவட்ட
தலைவர் ஆர்.சாந்தி, மாநில துணைத் தலைவர் முத்துலட்சுமி, மாநில துணை தலைவர் தூதை.
செல்வம் உள்ளிட்ட 20 பேர் ஒன்று கூடினார்கள்.

காதலர் தின வாழ்த்து அட்டைகள் மிகவும் கொச்சையாக இருப்பதாகக் கூறி அவற்றை அவர்கள்
எரிக்க முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதே சமயம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பினர்
காதலர் தினத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த தினத்தை சாதிய எதிர்ப்பு
தினமாக அனுசரிப்பதாக தெரிவித்த அவர்கள் சாதியத்தை வேரறுக்க காதல் செய்வீர் என்பது போன்ற
வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது
செய்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் தமிழக முதல்வர் கருணாநிதி வெகு விரைவாக
உடல்நலம் பூரணமாக குணமடைய வேண்டி, திருக்கோயிலின் பணியாளர் சங்கத்தின் சார்பாக வடபழனி
முருகனுக்கு பால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று
முன்தினம் காலை 7 மணி அளவில் பால் அபிகேஷம் சிறப்பாக நடைபெற்றது.

!!!!!!!!!!!!!!!!!!!

மும்பை பயங்கரவாத தாக்குதல் தொட‌ர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள
அஜ்மல் அமீர் கஸாபை எக்காரணத்திற்காகவும் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை
என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

விசாரணைக்காக தேவைப்பட்டால் கஸாபை ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் கேட்போம் என்று
பாகிஸ்தான் ‌உ‌ள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்திருந்த கருத்திற்கு இந்திய
அயலுறவு அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்டது. கஸாபை ஒப்படைக்கும் பேச்சிற்கே
இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ள அயலுறவு அமைச்சகம், மும்பை பயங்கரவாதத்
தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை பாகிஸ்தான் தான் இந்தியாவிடம் ஒப்படைக்க
வேண்டுமே தவிர, வேறு எந்த வழியுமில்லை என்று கூறியுள்ளது.

!!!!!!!!!!!!!!

பொது ம‌க்களு‌க்கு‌த் தொ‌ந்தரவு செ‌ய்யு‌ம் வகை‌யி‌‌ல் ‌பிர‌ச்சார‌ம் செ‌ய்தத‌ற்காக
‌பிரஜா ரா‌ஜ்ய‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌சிர‌ஞ்‌சீ‌வி ‌மீது 3 ‌பி‌ரிவுக‌ளி‌ல் வழ‌க்கு
ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

பிரபல நடிகரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி, ஆந்திர மாநிலம்
முழுவதும் சாலையோர‌ப் பிர‌ச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நேற்று அவ‌ர் நசரத்
பேட்டை நகரில் இரவு 10 மணிக்கு மேல் சாலையோர பிர‌ச்சாரத்தில் ஈடுபட்டார்.

அ‌ப்போது, ‌பிர‌ச்சார‌த்தை‌த் தடு‌த்த காவல‌ர்க‌ள் ‌சிர‌ஞ்‌‌சீ‌வி மீது மக்கள் பிரஜை
என்ற முறையில் உத்தரவுக்கு ஒத்துழைக்க மறுத்தது, பொது இடத்தில் இய‌ல்பு
வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தடையாக இருந்தது, பொது மக்களுக்கு‌த் தொந்தரவு அளித்தது ஆகிய 3
பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

பொது நல வழக்கு ஒ‌ன்‌றி‌ல், நசரத் பேட்டை நகரில் இரவு 10 மணிக்கு மே‌ல் சாலையோர
நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கடந்த டிசம்பர் 25ஆ‌ம் தேதி ஆந்திர உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை
விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி ‌சிர‌ஞ்‌சீ‌வி மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!

world

உலக பொருளாதாரத்தையும் மற்றும் உலக நிதி நிறுவனங்களையும் ஸ்திரப்படுத்துவதே சர்வதேச
சமூகம் தற்போது எதிர்கொள்கின்ற மிகவும் முக்கியமான சவாலாகும் என்று முக்கிய தொழில்வள
நாடுகளின் அமைப்பான ஜி-7 அமைப்பின் நிதி அமைச்சர்களும், மத்திய வங்கிகளின் ஆளுனர்களும்
கூறியுள்ளனர்.

நிலைமையை சரிப்படுத்தும் நடவடிக்கைகள் ஒட்டு மொத்த பலனைத்தருவதற்கு அனைவரும் இணைந்து
செயற்பட வேண்டியது அவசியம் என்று ரோமில் நடந்த ஜி 7 அமைப்பின் இரு நாள் மாநாட்டின்
பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை கூறியுள்ளது.

ஆனால், தனித்தனி நாடுகள் தமது சொந்த பொருளாதார நலனை மாத்திரம் முன்னிலைப்படுத்தி
மேற்கொள்ளும் எதிர் நடவடிக்கைகள், ஒட்டுமொத்த உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்
என்று ஜி 7 அமைப்பின் அமைச்சர்கள் கூறியுள்ளனர

!!!!!!!!!!!!!!!!

பாகிஸ்தானில் குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள்
கூறுகின்றன.

அநேமாக இது ஆளில்லா அமெரிக்க விமானம் நடத்திய தாக்குதல் என்றும்,
ஆஃப்கன் எல்லைக்கருகிலுள்ள தெற்கு வஸிரிஸ்த்தான் பழங்குடி பகுதியில்,
தலிபான்களால் பயன்படுத்திய வீட்டொன்றின் மீதே ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தாகவும் அந்தச்
செய்திகள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தான் அரசோடு பேச அமெரிக்காவால் அப்பகுதிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்
ரிச்சர்ட் ஹோல்புரூக் அவர்கள் சென்றுள்ள சமயத்தில் இந்தச் செய்திகள் வந்துள்ளன.

பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் தலிபான்களுக்குக் கிடைக்கும் அடைக்கலம், ஆதரவு
என்பன ஆஃப்கானிஸ்தானத்தில் அந்த அமைப்பின் கிளர்ச்சிகள் பெருகத் துணையாக உள்ளன என்று
ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும் கூறுகின்றன.

!!!!!!!!!!!!!!!

தலிபான் அமைப்பு பாகிஸ்தானின் இருப்பையே அச்சுறுத்துகிறது என்று பாகிஸ்தான அதிபர்
அசீஃப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நியாமான அளவு பெரிய இடத்தில் தலிபான் காலூன்றி விட்டது என்றும்,
அதற்கொதிரான போர் என்பது பாகிஸ்தானின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையாக
விட்டது என்றும், அந்த அமைப்பு பாகிஸ்தானைக் கைப்பற்ற முயல்கிறது என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ் அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியில், பாகிஸ்தான் இதுவரை
தலிபான் பிரச்சனையை இல்லாத ஒன்றாகக் காட்ட முற்பட்டது என்றும், அந்தப் பலவீனத்தைத்
தலிபான் அமைப்பினர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் பாகிஸ்தான
அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.

!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.