அரச கட்டுப்பாட்டிற்கு இடம்பெயர்ந்து வந்த தமிழ் இளைஞர், யுவதிகள் 33 பேர் கைது: புனர்வாழ்வு முகாங்களில் தடுத்து வைப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினராலும், புலனாய்வுப் பிரிவினாலும் 35 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டனர்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாத போதிலும் 35 பேர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் 4ம் மாடிக்கு அழைத்து வரப்பட்டு கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

எனினும் 35 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 33 பேர் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர். பெண்கள் இருவரும் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமுக்கும், ஆண்கள் அனைவரும் பொலனறுவ வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் வெளியிட்டுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்:-

1. அரியரட்ணம் சிறீரங்கன்- பூநகரி
2. அருளநாதன் ஆதவன்- பூநகரி
3. திருநாவுகரசு தர்ஷனா- பூநகரி
4. ஜேசுதாசன அன்டன் ரெஜினோலட்- சின்ன பண்டிவிரிச்சான், மடு
5. கணேஷலிங்கம் நிர்மலன்- கரிஞ்சிகுடியிருப்பு, முல்லைத்தீவு
6. வாஞ்சிஆனந்தன் சதீஸ்வரன்- சபாபதிபிள்ளை வீதி, சுன்னாகம்
7. பேரின்பநாயகம் செலுமைநாதன்- தட்சணாமருதமடு, பாலம்பிட்டி
8. சிவராசா மதனரூபன் – கரியாலை நாகபடுவான், பல்லவராயன்கட்டு
9. முத்துலிங்கம் குணதீசன் – கட்ஷன் வீதி, வட்டக்கட்சி, கிளிநொச்சி
10. இராஜேந்திரன் கிருபாகரன் உடையார்கட்டு, இருட்டுமடு, முல்லைத்தீவு
11. ஜேசுதாசன் ஜெகராஜா- கல்மடு படிவம் 1 வவுனியா
12. இரவீந்திரன் ஸ்டனிஸ்லாஸ் – வேலங்குளம், அடம்பன்
13. கனகரட்ணம் குகபிரசாந்த – பூநகரி
14. துரைராசா கணேசுதன் – 3ஆம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம்
15. யேசுரட்ணம் அன்டனி பிரபாகரன்- கொழும்பு 13
16. அன்டனி ரெஜினோல்ட் – இருட்டுமடு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
17. ராஜரட்ணம் நந்தகுமார் – கண்டாவளை, கிளிநொச்சி
18. வசந்தரா செல்வம் கஜேந்திரன் – தருமபுரம், கிளிநொச்சி
19. குருநாசவன் தரதாஸ் நிதர்சன் – ஆணைவிழுந்தான், கிளிநொச்சி
20. பஸ்தியான் அன்டனி – மடு
21. கனகபிரகாசம் செல்வராஜ் – தலைமன்னார், மன்னார்
22. இராஜரட்ணம் ஜெயரூபன் – முரசுமோட்டை, பரந்தன்
23. இரட்ணசிங்கம் நிரோஷன் – பளை
24. பாஸ்கரன் சுபாஸ்கரன் – உடுவில் மேற்கு, மானிப்பாய்
25. சிற்றம்பலம் சிவகுருநாதன் கொடிகாமம்
26. நடராஜா தேவகுமார் – உதயநகர், கிளிநொச்சி
27. இராசேந்திரம் மினின்ராஜ்- பல்லவராயன்கட்டு
28. காண்டியா சண்முகம் – யாழ்ப்பாணம்
29. லோகநாதன் ஹரிகரன் – கட்டைகாடு, கிளிநொச்சி
30. அன்டனி சால்ஸ் – சின்னப்பண்டிவிரிச்சான், மடு
31. தர்மராசா கசரதன் – கனகபுரம், கிளிநொச்சி
32. பென்ஜமின் போல்ராஜ் – உதயநகர் மேற்கு, கிளிநொச்சி
33. முத்துகமார் சுரேந்திரன் – சின்னபண்டிவிரிச்சான், மடு
34. காந்தரூபன் மெரினா – வெற்றிலைகேணி, முல்லைத்தீவு
35. ஜோசப் ஸ்டெலின் சுபா – உதயநகர், கிளிநொச்சி

அடைக்கலம் என வந்த பொதுமக்களை விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட பலர் காடுகளிலும், பொது மயானங்களிலும் சுட்டும், எரியூட்டப்பட்டு கொலை செய்வது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதையடுத்து, அரசாங்கத்திற்கு எற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக கைது செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கும் அனுப்புவதாக தற்போது தகவல் வெளியிட்டுவருகின்றது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.