காரைநகர் கடற்படை முகாமில் சிப்பாய் உயிரிழப்பு

காரைநகர் கடற்படைத் தளத்தில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாயொருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை காலை கடமையில் ஈடுபட்டிருந்தபோது இவர் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் காரைநகர் கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அங்கு உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவரது சடலத்தை பார்வையிட்ட ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.