‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (13.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சுவிற்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளையோரினால் குறுகிய
காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில்
நேற்று முன்நாள் தீக்குளித்து மரணமான முருகதாசனுக்கு அங்கு திரண்டிருந்த தமிழ் மக்கள்
வணக்கம் செலுத்தினர்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் நேற்று வெள்கிக்கிழமை பிற்பகல் 1:00
மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் திரண்டனர்.

நிகழ்வின் தொடக்கத்தில், ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்க்க அனைத்துலக சமூகம் தலையிடக்கோரி
நேற்று முன்நாள் இரவு 8:30 நிமிடமளவில் தீக்குளித்த ஈழத்தமிழரான முருகதாசனுக்கு அங்கு
திரண்டிருந்த தமிழ் மக்கள் தமது வணக்கத்தினை செலுத்தினர்.

//////////////////////////////

இலங்கை யுத்த நிலவரம் குறித்து பிரிட்டன் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்து
செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டேஸ் பிரவுணை இலங்கைக்கான விசேட
பிரதிநிதியாக நியமித்தமை காலனித்துவ ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கை என அவர்
சாடியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுணின் இந்தத் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் தனது
உத்தியோகபூர்வ எதிர்ப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரங்களில் சர்வதேச நாடுகளின் தலையீட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்

////////////////////////

இலங்கைக்கான விசேடப் பிரதிநிதி நியமனம் ஒருதலைப்பட்சமான நடவடிககை அல்ல என பிரிட்டன்
தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்து ஆராய்வதற்காகவே தாம் விசேட பிரதிநிதியொருவரை
நியமித்ததாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் தற்போதைய நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டதன் பின்னரே இந்த
நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு விசேட பிரதிநிதிதியொருவரை நியமிப்ப்பதற்கான காரணம் குறித்து பிரிட்டன்
வெளிவிவகார அமைச்சு செயலாளர் மிலிபான்ட், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்தவிற்கு
விளக்கமளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், பிரிட்டன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென
கொழும்பு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

///////////////////////

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு, மனித அவலங்கள் குறித்து கவனம்
செலுத்துமாறு, பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டெஸ் பிறவுணை
இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் நியமித்ததை
விடுதலைப் புலிகள் வரவேற்கின்றோம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச
விவகாரங்களுக்கான பிரதிநிதி எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விசேட பிரதிநிதி டெஸ் பிறவுணுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளதாவது:

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், அங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து
கவனம் செலுத்தி சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டிய
தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உள்ளதென்றும், ஆனால் பிரித்தானிய
அரசினால் தற்போது முனெடுக்க இருந்த சமாதான முயற்சிகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது
எனவும் சுட்டிக்காட்டிய அவர்,

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை விடுதலைப் புலிகள்
இன்னமும் மதிப்பதாகவும், இம்முரண்பாட்டிற்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்கு தாம்
இன்னமும் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்தமையானது இலங்கையில்
நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இனமுரண்பாட்டிற்கு அரசியல் தீர்வு காண உதவும் என்பதோடு,
வன்னிப் போர்ப் பிராந்தியத்தில் அகப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதலளிக்கும்
ஒன்றாகவும் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் மீண்டும் ஒருமுறை சமாதான விரும்பிகள் யார் என்பதை புலிகள் பிரித்தானிய
அரசுக்கு தெள்ளத் தெளிவாக்கியுள்ளனர் என அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

//////////////////

இலங்கையில் தமிழ் பொதுமக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையை
அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக
தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட்
இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற
தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள
கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:-

ஐயா இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக
மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எவ்வாறாயினும் பொதுக்கள்
குருதிப்பெருக்கைத் தவிர்ப்பதற்கு நாட்டுக்குள் ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை
அனுமதிக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்துவதற்கான வேளை
வந்துள்ளதாக நான் நம்புகின்றேன்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள
மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருப்பதாக நாட்டிலிருந்து
வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தனது பக்கத்திற்கு வருமாறு இலங்கை அரசு தமிழ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ஆனால்
அவ்வாறு வருவது தொடர்பான இயற்கையான தயக்கமும், அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளன.
இதற்குச் சமாந்தரமாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மக்கள் தப்பிச்செல்ல
முயற்சித்தால் புலிகள் அவர்களைச் சுட்டு விடுவார்கள் என்பது தொடர்பான செய்திகளும்
உள்ளன.

தமிழ் மக்கள் அதிகளவுக்கு இழப்புக்களையும் அழிவுகளையும் எதிர்கொண்டிருப்பதைக்
காணமுடிகின்றது. இலங்கைப் படையினர் மற்றும் அவர்களின் முகாம்கள் தொடர்பாக அவர்கள்
அச்சமடைந்துள்ளனர். அவர்களின் வித்தியாசமான மொழி குறித்துக் குறிப்பிடத் தேவையில்லை.
சர்வதேச சமூகம் உடனடியாகச் செயற்படாவிடின் சுமார் 250,000 ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
பேரனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலதிகமாக ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் இந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி சென்றடைவதற்கு
இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துமாறு நான் அழைப்பு விடுகின்றேன். அத்துடன்
சர்வதேச பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் செல்வதற்கு முழுஅளவில் அனுமதி வழங்க
வேண்டும். காலம் கைநழுவிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னுரிமை கொடுத்து இந்த உதவியை
மேற்கொள்ள வேண்டும

//////////////////////////

அமைச்சர் கே.ஏ.பாஸிஸ் வாக்குச் சாவடியில் புத்தளம் எப்.எம் வாயிலாக பிரசார நடவடிக்கைகளை
மேற்கொண்டதாக பப்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிக்கோ
தெரிவித்தார்.,e;eltbf;ifahdJ தேர்தல் விதிகளை மீறியுள்ளதாக பப்ரல் அமைப்பு
தெரிவிj;Js;sJ

அமைச்சர் கே.ஏ.பாஸிஸ் புத்தலம் எப்.எம் வாயிலாக வெற்றிலைச் சின்னத்திற்கு
வாக்களிக்குமாறு ஒலிபரப்பு செய்துள்ளதாக பப்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ
தெரிவித்துள்ளார்

////////////////////

மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான சகல
ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலை 7
மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

இரு மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய
தேசியக் கட்சிக்குமிடையில் போட்டி நிலவுகின்றது. இரு தரப்பினரும் வெற்றி தொடர்பில்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துடன் இணைந்து இரு மாகாண சபைகளிலும் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. ஐக்கிய
தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர்
தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

//////////////////////////////

வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7.00
மணிக்கு ஆரம்பமாகின. இன்று காலை ஆரம்பமான வாக்கு பதிவுகளின் போது எவ்விதமான தேர்தல்
வன்முறைகளும் இன்றி சுமுகமான முறையில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4.00 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப்பதிவு செய்ய முடியுமென தேர்தல்
திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாகாண சபைகளின் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள்
வாக்குகளை பதிவு செய்தவண்ணமுள்ளதாக அங்கிருந்து கிடைக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.

/////////////////////////

காரைநகர் கடற்படைத் தளத்தில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாயொருவர் துப்பாக்கிச்
சூட்டுக் காயத்துடன் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை கடமையில் ஈடுபட்டிருந்தபோது இவர் துப்பாக்கிச்
சூட்டுக்காயத்துடன் காரைநகர் கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் எனினும்
சிகிச்சை பலனளிக்காத நிலையில் அங்கு உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவரது சடலத்தை பார்வையிட்ட ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா சடலத்தை
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம்
ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

////////////////

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது சந்தேகத்தின்
பேரில் இராணுவத்தினராலும், புலனாய்வுப் பிரிவினாலும் 35 இளைஞர், யுவதிகள் கைது
செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாத போதிலும் 35 பேர் கொழும்பு
குற்றப்புலனாய்வு பிரிவினரால் 4ம் மாடிக்கு அழைத்து வரப்பட்டு கடுமையான
விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

எனினும் 35 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் 33 பேர் புனர்வாழ்வு
முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவரும் பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
பெண்கள் இருவரும் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமுக்கும், ஆண்கள் அனைவரும் பொலனறுவ
வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் வெளியிட்டுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களின் பெயர்
விபரங்கள்:-

1. அரியரட்ணம் சிறீரங்கன்- பூநகரி
2. அருளநாதன் ஆதவன்- பூநகரி
3. திருநாவுகரசு தர்ஷனா- பூநகரி
4. ஜேசுதாசன அன்டன் ரெஜினோலட்- சின்ன பண்டிவிரிச்சான், மடு
5. கணேஷலிங்கம் நிர்மலன்- கரிஞ்சிகுடியிருப்பு, முல்லைத்தீவு
6. வாஞ்சிஆனந்தன் சதீஸ்வரன்- சபாபதிபிள்ளை வீதி, சுன்னாகம்
7. பேரின்பநாயகம் செலுமைநாதன்- தட்சணாமருதமடு, பாலம்பிட்டி
8. சிவராசா மதனரூபன் – கரியாலை நாகபடுவான், பல்லவராயன்கட்டு
9. முத்துலிங்கம் குணதீசன் – கட்ஷன் வீதி, வட்டக்கட்சி, கிளிநொச்சி
10. இராஜேந்திரன் கிருபாகரன் உடையார்கட்டு, இருட்டுமடு, முல்லைத்தீவு
11. ஜேசுதாசன் ஜெகராஜா- கல்மடு படிவம் 1 வவுனியா
12. இரவீந்திரன் ஸ்டனிஸ்லாஸ் – வேலங்குளம், அடம்பன்
13. கனகரட்ணம் குகபிரசாந்த – பூநகரி
14. துரைராசா கணேசுதன் – 3ஆம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம்
15. யேசுரட்ணம் அன்டனி பிரபாகரன்- கொழும்பு 13
16. அன்டனி ரெஜினோல்ட் – இருட்டுமடு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
17. ராஜரட்ணம் நந்தகுமார் – கண்டாவளை, கிளிநொச்சி
18. வசந்தரா செல்வம் கஜேந்திரன் – தருமபுரம், கிளிநொச்சி
19. குருநாசவன் தரதாஸ் நிதர்சன் – ஆணைவிழுந்தான், கிளிநொச்சி
20. பஸ்தியான் அன்டனி – மடு
21. கனகபிரகாசம் செல்வராஜ் – தலைமன்னார், மன்னார்
22. இராஜரட்ணம் ஜெயரூபன் – முரசுமோட்டை, பரந்தன்
23. இரட்ணசிங்கம் நிரோஷன் – பளை
24. பாஸ்கரன் சுபாஸ்கரன் – உடுவில் மேற்கு, மானிப்பாய்
25. சிற்றம்பலம் சிவகுருநாதன் கொடிகாமம்
26. நடராஜா தேவகுமார் – உதயநகர், கிளிநொச்சி
27. இராசேந்திரம் மினின்ராஜ்- பல்லவராயன்கட்டு
28. காண்டியா சண்முகம் – யாழ்ப்பாணம்
29. லோகநாதன் ஹரிகரன் – கட்டைகாடு, கிளிநொச்சி
30. அன்டனி சால்ஸ் – சின்னப்பண்டிவிரிச்சான், மடு
31. தர்மராசா கசரதன் – கனகபுரம், கிளிநொச்சி
32. பென்ஜமின் போல்ராஜ் – உதயநகர் மேற்கு, கிளிநொச்சி
33. முத்துகமார் சுரேந்திரன் – சின்னபண்டிவிரிச்சான், மடு
34. காந்தரூபன் மெரினா – வெற்றிலைகேணி, முல்லைத்தீவு
35. ஜோசப் ஸ்டெலின் சுபா – உதயநகர், கிளிநொச்சி

அடைக்கலம் என வந்த பொதுமக்களை விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின்
பேரில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட பலர் காடுகளிலும், பொது மயானங்களிலும்
சுட்டும், எரியூட்டப்பட்டு கொலை செய்வது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள்
வெளியாகியதையடுத்து, அரசாங்கத்திற்கு எற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக கைது
செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கும் அனுப்புவதாக தற்போது தகவல்
வெளியிட்டுவருகின்றது குறிப்பிடத்தக்கது.

//////////////////////////////////

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிழக்குத் திமோர் அமைப்பொன்று ஆயுத விநியோகம் செய்து
வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்குத் திமோரைச் சேர்ந்த ப்ரோட்லின் என்ற அமைப்பே இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை
விநியோகம் செய்துள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் இது புலனாகியுள்ளது.

இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்,
பாதுகாப்பு காரணங்கள் கருதி அவை வெளியிடப்பட மாட்டாதெனவும் காவல்துறை உயரதிகாரியொருவர்
குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்குத் திமோரிலிருந்து ஆயுதக் கப்பலை
தருவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

/////////////////////////

கையடக்க மற்றும் சீ.டி.எம்.ஏ தொலைபேசி உரிமையாளர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம்
திகதிக்கு முன்னதாக தங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் கட்டாயமாக வாடிக்கையாளர்கள்
தொடர்பான தகவல்களை பேண வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கையை தொலைபேசி நிறுவனங்கள்
மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்
நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிறுவர்கள் உள்ளிட்ட சகல வாடிக்கையாளர்களது பதிவுகளையும் தொலைபேசி
நிறுவனங்கள் கட்டாயமாக பேண வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

/////////////////////////

முல்லைத்தீவில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லாமல்,
அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பவேண்டும்.
அந்த இடங்களில் இடைத்தங்கல் முகாம்களை அமைத்து அவர்களைத் தங்கவைத்து பின்னர் அவர்களின்
வீடு களில் தங்க அனுமதிக்க வேண்டும்.மேற்கண்ட அவசர கோரிக்கையை யாழ். ஆயர் அதிவண தோமஸ்
செளந்தர நாயகம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு நேற்று மாலை இக் கோரிக்கை அடங்கிய கடிதத்தை ஆயர் அனுப் பியுள்ளதாக ஆயரின்
செயலாளர் றொசான் அடிகளார் தெரிவித்தார்.
யாழ். ஆயர் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துவரும் மக்களை வவுனியாவுக்கு
அழைத்துச்சென்று தங்க வைப்பதால் அவர்கள் தமது உறவினர்களில் இருந்து பிரிக்கப்பட்டு
விடுவார்கள்; தனிமைப் படுத்தப்பட்டு விடுவார்கள்.
இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு இடம் பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் அதாவது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனில் யாழ்ப்பாணத்திலும் கிளி நொச்சியைச் சேர்ந்தவர் எனில்
கிளிநொச் சியிலும் தங்கவைக்க வேண்டும்.
தென்மராட்சி, மிருசுவில், பளை ஆகிய இடங்களில் இடைத்தங்கல் முகாம்களை அமைத்து அவர்களைத்
தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
அந்த மக்கள் சொந்த இடங்களில் அமை தியாக வாழ இது உதவும் என்று கூறப் பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் யாழ்., வன்னி அரச
அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
///////////////////////

india news

/////////

இலங்கை விடயத்தில் இந்தியா தனது நிலைப் பாட்டில் சிறு மாற்றம் செய்துள்ளது.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை மாற்றி
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு வசதியாக விடுதலைப்புலிகள் தாம்
ஆயுதங்களை கீழே வைப்பதற்கு தயார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று நேற்று இந்தியா
கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய மத்திய அரச தரப்பின் மேற்படி மெல்லிய மாற்றம், இந்திய ஜனாதிபதி பிரதீபா
பட்டீலின் நேற்றைய பேச்சில் பிரதி பலித்ததாக அரசியல் அவதானிகள் சுட் டிக்காட்டினர்.
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி
அரசின் புதிய கருத்தை சிறு மாற்றத்தை வெளியிட்டார்.
இலங்கை அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிக்கும் சமகாலத்தில்
விடுதலைப்புலிகளும்
ஆயுதங்களை கீழே வைக்கத் தயார் என்று தமது விருப்பத்தை அறிவிக்க வேண்டும். அவ்வாறு
செய்வதன் மூலம் இருசாராரும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வழிபிறக்கும் என்று
ஜனாதிபதி நேற்றைய பேச்சில் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையில் நடைபெறும் போருக்கு உடனடியாக சுமுகமாக தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
முன்வர வேண்டும்.
அதற்கு முதற்கட்டமாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து பேச்சுவார்த்தைக்கு தயாராக
இருப்பதாக இலங்கை அரசுக்கு அறிவிக்க வேண்டும். இந்திய அரசு இனப்பிரச்சினைக்கு
சுமுகத்தீர்வு காணவே விரும்புகிறது என்றார் ஜனாதிபதி.
/////////////
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கும் பா.ம.க, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய
கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்ப்புத் தெரிவித்தனர்
என்று செய்தி ஏஜன்சிகள் தெரிவித்தன.
////////////
இலங்கைப் பிரச்னையில், அந்த நாட்டு அதிபர் ராஜபக்சவின் நிலைப்பாட்டை மத்திய அரசு
வழிமொழிந்து இருக்கிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் போர் நிறுத்தம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி
குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு முழுமையானதாக
இல்லை.

ஏற்கெனவே, இலங்கை அதிபர் ராஜபக்ச எடுத்துள்ள நிலைப்பாட்டினையே இந்திய குடியரசுத்
தலைவரும் வழி மொழிந்து இருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலர்களாக விடுதலைப்புலிகள் மட்டுமே இருக்கிறார்கள்.
அவர்களும் ஆயுதங்களை கீழே வைத்து விட்டால் அந்த மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை
ஏற்பட்டுவிடும். தமிழினப் படுகொலையை நடத்த இலங்கை இராணுவத்துக்கு வசதியாகி விடும்.

பாலஸ்தீனப் பிரச்னை… பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் திடீரெனப்
புகுந்து அப்பாவி மக்களை படுகொலை செய்தது.

இதனை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டித்தன. உடனடியாக, இஸ்ரேலியப் படை காஸா
பகுதியில் இருந்து வெளியேற வேண்டுமெனவும், அங்கு இருதரப்பும் போர் நிறுத்தம் செய்ய
வேண்டும் எனவும் இந்தியாவும், உலக நாடுகளும் வற்புறுத்தின.

ஆனால், போர் நிறுத்தத்துக்கு நிபந்தனையாக பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களை கீழே போட
வேண்டுமென இந்தியாவோ, பிற நாடுகளோ கூறவில்லை.

எரிவதை இழுத்தால்…எரிவதை இழுத்தால் கொதிப்பது நிற்கும் என்ற பழமொழிக்கு இணங்க இலங்கை
அரசுக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ ரீதியான உதவிகளை நிறுத்தினால் ஒழிய உண்மையான
போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு ஒரு போதும் சம்மதிக்காது.

இலங்கை இராணுவத்தால் மருத்துவமனைகள் தாக்கப்பட்டு, மருத்துவர்களும், தாதிகளும்
வெளியேற்றப்பட்டு விட்டனர். எனவே, உடனடியாக மருத்துவர்கள் குழு ஒன்றை அனுப்பி உதவ
வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

///////////////////
மே‌ற்கு வ‌ங்க மா‌நில‌ம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சோழமண்டல
‌விரைவு இரயில் ஒரிசா தலைநகர் புவனேஸ்வரம் அருகில் நே‌‌ற்‌றிரவு தடம் புரண்டது. இ‌ந்த
விபத்தில் 15 பேர் உ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர். 150 பேர் காயம் அடைந்தனர்.

சென்னைக்கும், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கும் இடையே கோரமண்டல் ‌விரைவு இரயில்
இயக்கப்பட்டு வருகிறது. இந்த ‌விரைவு இர‌‌யி‌ல் நேற்று பிற்பகலில் ஹவுராவில் இருந்து
புறப்பட்டது. இன்று மாலை சென்னைக்கு வந்து சேருவதாக இருந்தது.

ஆனால், நேற்‌றிரவு 7.50 மணிக்கு ஒரிசா மாநில‌ம் புவனே‌ஸ்வரத்தில் இருந்து 120 கி.மீ.
தொலைவில் உள்ள ஜாஜ்பூர் ரோடு இரயில் நிலையம் அருகே இரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு
கவிழ்ந்தன. சரக்கு வைக்கும் மற்றும் தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி, முன்பதிவு அல்லாத
2 பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவை தடம் புரண்ட
பெட்டிகள்.

இவற்றில் 4 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி நசுங்கி விட்டன. குளுகுளு வசதி கொண்ட
பெட்டிகள், பின்பகுதியில் இருந்ததால் அவை கவிழாமல் தப்பி விட்டன. பலத்த சேதம் அடைந்த
பெட்டிகள் அனைத்தும், என்ஜின் அருகே இருந்தவை.

இந்த விபத்தில் 15 பயணிகள் பலியானார்கள். என்ஜின் ஓ‌ட்டுன‌ர், உதவி ஓ‌ட்டுன‌ர் உள்பட
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஜாஜ்பூர் மரு‌த்துவமனை‌யி‌ல்
அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும்,
படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10
ஆயிரமும் வழங்கப்படும் என இரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
விபத்து குறித்து துறை ரீதியான முழு விசாரணைக்கும் உத்தரவிட்டார்

/////////////////
திருநெ‌‌ல்வே‌லி : ”ம‌க்களவை‌த் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, தேசிய கட்சியுடன்
மட்டுமே கூட்டணி வைத்துக்கொள்ளும்” என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி‌த் தலைவ‌ர்
சரத்குமார் கூறினார்.
திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌ம் தென்காசியில் நட‌ந்த க‌ட்‌சி‌யி‌ன் செ‌ய‌ல்வீர‌ர்க‌ள்
கூ‌ட்ட‌த்த‌ி‌ல் கல‌ந்து கொ‌ண்ட அ‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சர‌த்குமா‌ர்
செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதுதான் எனது
முடிவு. ஆனால் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து போட்டியிட வேண்டும்
என்று கூறுகின்றனர். இதனால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது
எ‌ன்றா‌ர்.

மார்ச் 15ஆ‌ம் தேதியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும் எ‌ன்று‌ம் பெரும்பாலும்
தேசிய கட்சியுடன் தான் கூட்டணி இருக்கும் எ‌ன்று‌ம் சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.

இலங்கை‌த் தமிழர் பிரச்சனைக்காக வரு‌ம் 25ஆ‌ம் தேதி டெல்லியில் எங்கள் கட்சி சார்பில்
ஆர்ப்பாட்டம் நடக்கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த சர‌த்குமா‌ர், வடமாநில முதலமைச்சர்கள்
மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சனையை தேசிய பிரச்சனையாக
கருதவேண்டும் என்று அவர்களிடம் கூறப்போகிறேன் எ‌ன்றா‌ர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினியை, பிரியங்கா சந்தித்த பிறகுதான்
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். எனவே
சிறையில் பிரியங்கா நளினியுடன் என்ன பேசினார் என்ற விவரத்தை வெளியிட வேண்டும் எ‌ன்று
சர‌த்குமா‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

//////////////

இலங்கை தமிழர் பிரச்சனை தீர்வுக்கு குடியரசு‌த் தலைவ‌ர் கருத்துரைக்கேற்ப அனைவரும் ஒரே
நிலையில் ஒன்றுபடுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவர் கே.‌வி. தங்கபாலு
வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொட‌ர்பாக அவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்
கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், சோனியா காந்தி
வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் நாட்டு
மக்களுக்கு முன்பு அளித்திருந்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருப்பதை
மகிழ்ச்சியோடு பாராட்டியிருக்கிறார்.

அதோடு தமிழகத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு
தெரிவித்திருப்பதை தமிழகம் நன்றியோடு பாராட்டுகிறது.

மத்திய அரசு இலங்கைவாழ் அப்பாவித் தமிழர்களின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து உதவி புரிந்து
வருகிறது என்ற விபரங்களையும் தெரிவித்துள்ளார். இலங்கை‌த் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு
எப்போதும் மத்திய அரசு துணை நிற்கும், உதவி புரியும் என்றும் குடியரசுத் தலைவர் உரையில்
தெரிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

எனவே இலங்கை‌த் தமிழர் இன்னல் தீர தமிழகத்திலுள்ள அனைத்து‌க் கட்சிகளும் அதன்
தலைவர்களும் தனித்தனியாக போராட்டம் என்ற பெயரில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு,
தொடர்ந்து மத்திய அரசையும், காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களையும் இழித்தும், பழித்தும்
நடத்துகிற தேவையற்ற போராட்டத்தை அந்த கட்சிகளும், அதன் தலைவர்களும் கைவிட்டு அனைத்து
தரப்பான மக்களோடு ஒரே நிலையில் இலங்கைவாழ் அப்பாவித் தமிழர்களை காப்பாற்ற கட்சி
வேறுபாடுகள் மறுந்து மத்திய அரசோடும் தமிழக அரசோடும் இணைந்து செயல்பட ஒன்றுபடுவோம்.
தீவிரவாத்தை ஒழிப்போம் வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன் எ‌ன்று த‌ங்கபாலு
கூ‌றியு‌ள்ளா‌ர்.

//////////////////////////

மதுரை‌யி‌ல் ‌தி.மு.க. ‌நி‌ர்வா‌கிக‌ள் 3 பேரை க‌ட்‌சி‌யி‌‌ன் அனை‌த்து
பொறு‌ப்புக‌ளி‌ல் இரு‌ந்து‌ ‌‌நீ‌க்க‌ம் செ‌ய்து தி.மு.க. பொது செயலாள‌ர் க.அன்பழகன்
‌உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறி‌‌விப்பில், மதுரை மாநகர் மாவட்டம்,
61-வது வட்டக் கழகச் செயலாளர் சி.எஸ்.செல்வராசு, 24-வது வட்டத்தைச் சார்ந்த தொண்டர் அணி
முன்னாள் அமைப்பாளர் வி.சரவணன், 23-வது வட்டத்தைச் சார்ந்த மீனவர் அணி அமைப்பாளர்
பி.டி.மணிமாறன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும்,

கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் தி.மு.க. உறுப்பினர்
பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி
வைக்கப்படுகிறார்கள் எ‌ன்று அ‌ன்பழக‌ன் த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

/////////////////////////

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள மாட்டோம் என்று சமாஜ்வாதி கட்சியின்
பொதுச் செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், கல்யாண் சிங்
தங்களுடன் தோழமை கொண்டுள்ள பிரச்சனையை சில காங்கிரஸ் தலைவர்கள் ஊதி பெரிய பிரச்சனை
ஆக்குவதாக குற்றம் சாற்றினார்.

“பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் மசூதி மீண்டும் கட்டப்படும் என்று
காங்கிரஸ் கூறியது. அந்த இடத்தில் கோவில் கட்டப்போவதாக பாரதிய ஜனதா கூறியது. ஆனால்,
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமோ, அந்த இடத்தில் கழிப்பறை கட்டப்பட வேண்டும்
என்று கூறினார்” என
நினைவு கூர்ந்த அமர்சிங், பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சிக்குள்ள பங்கு
குறித்தும் கேள்வி எழுப்பினார்.

பாபர் மசூதியின் 5 சதவீத பகுதி இடிக்கப்பட்டதுமே அப்போது உத்தரபிரதேசத்தில் குடியரசுத்
தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 95 சதவீத பகுதியும் குடியரசுத்
தலைவர் ஆட்சியில்தான் இடிக்கப்பட்டதாகவும் அமர்சிங் மேலும் கூறினார்.

கல்யாண் சிங்குடனான கூட்டணியை நியாயப்படுத்திய அமர்சிங், பாபர் மசூதி இடிக்கப்பட்டதில்
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மற்றும் கல்யாண் சிங் ஆகிய
இருவருமே குற்றவாளிகள்தான் என்று கூறினார்.

அப்படி இருக்கையில் காங்கிரஸ் உடன் கைகுலுக்க நாங்கள் தயாராக இருக்கும்போது,பாரதிய
ஜனதாவை எதிர்க்கும் கல்யாண் சிங்குடன் மட்டும் ஏன் கை குலுக்கக்கூடாது என்று அமர்சிங்
கேள்வி எழுப்பினார்.

///////////

கர்நாடகாவில் காதலர் தினம் கொண்டாடுபவர்களை தாக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு ராம்சேனா மற்றும் பஜ்ரங் தளம்
அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காதலர் தினமான இன்று ஜோடியாக
சுற்றுபவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் அந்த அமைப்பினர்
மிரட்டினர்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காதலர்களுக்கு பாதுகாப்பு
அளிக்கப்போவதாக சில அமைப்புகள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, காதலர் தினமான இன்று அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில்
ராமசேனா அமைப்பின் தலைவர் முத்தாலிக், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கைது
செய்யப்பட்டார்.

இந்நிலையில், காதலர் தினமான இன்று காதலர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கு தொல்லை
கொடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடக மாநிலத்தில் காதலர் தினம்
கொண்டாடும் காதலர்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துமீறி செயல்படுவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்” என்றார்.

/////////////

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்
என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி
கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்திய-அமெரிக்க நல்லுறவு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின்
வளர்ச்சிக்காக புஷ் பெருமளவில் உழைத்ததாகத் தெரிவித்தார். புஷ்ஷின் காலத்தில், இந்திய,
அமெரிக்க உறவு வளர்ச்சி அடைந்ததாகவும், இந்தியாவின் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவராக
அவர் திகழ்ந்ததாகவும் சிங்வி குறிப்பிட்டார். இந்தியரல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா
விருது வழங்கப்பட்டால், அதில், முதலிடம் வகிப்பவர் ஜார்ஜ் புஷ் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டில் வாஜ்பாய், கருணாநிதி உட்பட பல்வேறு தலைவர்களின் பெயர்கள், பாரத ரத்னா
விருதுக்காக பேசப்பட்ட நிலையில், தற்போது, புஷ்ஷின் பெயர் காங்கிரஸ் கட்சியினரால்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

/////////////

world

அமெரிக்காவில் பஃப்பலோ நகரின் குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் நொறுங்கி
விழுந்து சிதறியதில் பலியானவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்ற புதிய தகவல் தற்போது
வெளியாகி உள்ளது.

நியூயார்க்கில் இருந்து பஃப்பலோ நயாகரா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சென்று
கொண்டிருந்த கான்டினென்டல் ஃபிளைட் 3407, திடீரென்று குடியிருப்பு பகுதியில் நொறுங்கி
விழுந்து சிதறியது. இதில் 49 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின்போது
ஏற்பட்ட புகை பல மைல் தூரம் பரவியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்தில்
இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ஆனால்,
அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் இதுவரை தெரியவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில்
இருந்து கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

///////////

பாகிஸ்தான் அரசின் பலவீனங்களை நன்றாகப் புரிந்துகொண்டு, அதனைத் தங்களுக்கு சாதகமாக
தாலிபான் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தானிய மக்களின் வாழ்க்கை முறையை
சீர்குலைக்க தாலிபான்கள் முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டினார். தங்கள் நாட்டின்
பெரும்பாலான பகுதிகளில் தற்போது ஊடுருவியுள்ள தாலிபான்கள், பாகிஸ்தானை, தங்கள் நாடாக
மாற்ற முயன்று வருவதாகவும் தெரிவித்தார். தாலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து தாங்கள்
கடுமையாகப் போராடி வருவதாகவும் சர்தாரி கூறினார்.

////////////

ஜிம்பாப்வேயில் சர்ச்சைக்குரிய தேர்தல் நடந்து ஒரு வருடத்துக்குப் பிறகு புதிய
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு, அதிபர் முகாபே பதவிப்பிரமாணம் செய்து
வைத்துள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மோர்கன் சுவான்ங்கிராய் அவர்களின் ஜனநாயக மாற்றத்துக்கான
அமைப்பு என்னும் எதிர்க்கட்சிக்கும், அதிபர் முகாபேயின் ஷானு பி எஃவ் கட்சிக்கும்
இடையில், யாருக்கு எத்தனை அமைச்சுக்கள் என்பது தொடர்பாக நடந்த இறுதி நேர இழுபறிக்கு
பின்னர் பதவியேற்பு ஒருவாறு நடந்தது.

முன்னதாக, புதிய அரசாங்கத்துக்கான துணை விவசாய அமைச்சராக ஜனநாயக மாற்றத்துக்கான
அமைப்பினால் பிரேரிக்கப்பட்டிருந்த றோய் பென்னட் என்பவர் நாட்டைவிட்டு வெளியேற இருந்த
நிலையில் கைது செய்யப்பட்டார

/////////////

இராக்கின் தலைநகர் பாக்தாதுக்கு தெற்கே ஸ்காந் அரியா என்னும் இடத்தில் நடந்த தற்கொலைத்
தாக்குதலில் குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டதாக இராக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருடாந்த மத வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக கர்பாலா நகருக்குப் போய்க்கொண்டிருந்த
யாத்திரிகர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாத்திரிகர்கள் தங்கும் மடம் ஒன்றில் மக்கள் மத்தியில் ஊடுருவிய தற்கொலைக்
குண்டுதாரியான பெண் தனது இடுப்பில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளும் ஆவர

//////////////

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெறும் திரைப்பட விழாவில் இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு
யாருக்கும் இல்லாத அளவுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. .
49வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா அங்கு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த
திரைப்பட விழாவில் இந்தி திரையுலக கனவுக்கன்னி ஐஸ்வர்யா ராய் நடித்த “பிங்க் பாந்தர் 2′
என்னும் ஆங்கிலப்படம் திரையிடப்படு கிறது.
இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யாராய் பெர்லின் சென்றார். அவர் ரோஜா
நிற உடையணிந்து மேடையில் தோன்றியபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி முன்னாள்
உலக அழகியான அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அவரிடம் ஆட்டோகிராப் வாங்க குவிந்த ரசிகர்களுக்கு கையெழுத்தை போட்டுத்தள்ளிய அவர்
அதிலிருந்து விடுபட 15 நிமிட நேரம் ஆனது. அதன் பிறகு புகைப்பட நிபுணர்களுக்கு நீண்ட
நேரம் போஸ் கொடுத்தார். அது முடிந்ததும் தொலைக்காட்சிகள் அவரிடம் போட்டி போட்டுக்கொண்டு
பேட்டி எடுத்தன.

ஐஸ்வர்யா ராய் நடித்த படத்தின் நடிகர்கள் ஸ்டீவ் மார்ட்டின், பிரான்ஸ் சூப்பர் ஸ்டார்
ஜீன் ரெனோ, படத்தின் இயக்குனர் ஹரால்டு ஸ்வாட் ஆகியோர் ஐஸ்வர்யாவை வரவேற்று
அழைத்துச்சென்றனர். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த படத்தில் தான் சிறிய
பாத்திரமேற்று நடித்த போதிலும் படத்தின் வெற்றி தனக்கு உலக அளவில் புகழைத்தேடித்
தந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், உலகப் புகழ்பெற்ற நடிகர்களுடன் தாமும் கவுரவப் படுத்தப்படுவது பெரும்
மகிழ்ச்சியை அளித்ததாக அவர் கூறினார்.
படத்தில் நடித்த நடிகர்கள், படத்தை இயக்கிய இயக்குனர் ஆகியோர் ஐஸ்வர்யாராயின் நடிப்பை
வெகுவாக புகழ்ந்துரைத்தனர்
/////////////////////

Leave a Reply

Your email address will not be published.