சிவகங்கை கள்ளக்காதலர்கள் குமுளி லாட்ஜில் தற்கொலை

கூடலூர் : கேரளாவில் உள்ள குமுளி லாட்ஜில் சிவகங்கையைச் சேர்ந்த கள்ளக்காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கேரள மாநிலம், குமுளியில் உள்ள தனியார் லாட்ஜில் இரண்டு பேர் நேற்று முன்தினம் விஷம் குடித்து இறந்து கிடந்தனர்.


குமுளி போலீசார் உடலை கைப்பற்றி சோதனை நடத்தியபோது, சிவகங்கையைச் சேர்ந்த கோகுலரமணன் (36), நத்தினி (37) என்பது தெரியவந்தது. கோகுலரமணன் ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழாமல் 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். அதே போல் நந்தினியும் தனது கணவனை விட்டுப் பிரிந்து சிங்கப்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கோகுலரமணனும், நந்தினியும் வீட்டிற்குத் தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இந்த மாதம் 4-ம் தேதி முதல் குமுளியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் ரூம் கதவு திறக்காததால் போலீசாருக்கு லாட்ஜ் உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது, இருவரும் சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குமுளி இன்ஸ்பெக்டர் அனில் ஸ்ரீனிவாஸ் விசாரணை செய்து வருகிறார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.