(2ம் இணைப்பு)ஐ.நா. முன்றலின் முன்பாக தமிழ் இளைஞர் தீக்குளித்து மரணம்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

[2 ஆவது இணைப்பு: முருகதாசனின் படங்கள், மரண சாசனம் இணைப்பு]

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் என சுவிசில் இருந்து “புதினம்” செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாசன் (வயது 27) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.