ஈழத்தை அங்கீகரிக்க கோரி சென்னையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அறப்போராட்டம்

தமிழ் ஈழத்தில் எம் உறவுகளை இனபடுகொலை செய்து வரும் சிங்கள இனவெறி ராஜபக்ச அரசை எதிர்த்தும் அதற்கு உடந்தையாக இருக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசை கண்டித்து சென்னை காரப்பாக்கம் கே.சி.ஜி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 500 மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை வகுப்பு புறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினார்கள்.


இப் போராட்டத்தின்போது மாணவர்களால் அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:-

1. இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பியுள்ள தன் துருப்புகளையும் ஆயுதங்களையும் திரும்பப்பெற வேண்டும்.
2. தமிழ் ஈழத்தை அங்கிகரிக்கவேண்டும்.
3. ஈழத்தில் நடக்கும் இனபடுகொலையை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு அரசியல் தீர்வை முன்னெடுக்கவேண்டும்.
4. உடனடியாக அனைத்து சட்டம் மற்றும் கலை கல்லூரிகளை திறக்கவேண்டும்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.