நெல்லை-தந்தை உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் தந்த மகள்கள்

சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே இறந்த தந்தையின் உடலை, மருத்துவக் கல்லூரிக்கு அவரது மகள்கள் தானமாக அளித்தனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணபதியா பிள்ளை.

இவர் திருவேட்டநல்லூர் யூனியன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த 9ம் தேதி காலமானார்.

கணபதியா பிள்ளை தனது டைரியில் தான் இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக நெலலை மருத்துவக் கல்லூரிக்கு கொடுத்து விடவேண்டும் என குறிப்பு எழுதியிருந்தார்.

இதைக்கண்ட இவரது மகள்கள் வசந்தி, சுப்புலெட்சுமி, ஆகியோர் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி தங்களது தந்தையின் உடலை நெல்லை மருத்துவக்கல்லூரியில் உள்ள உடல்கூறு இயல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வசந்தி, சுப்புலெட்சுமி கூறுகையில், தந்தையின் விருப்பப்படியே நாங்கள் நடந்து கொண்டதால் நிச்சயம் அவரது ஆத்மா சாந்தியடையும். தலைமை ஆசிரியராக எத்தனையோ பேருக்கு கல்வியறிவு போதித்த தந்தை இறந்த பிறகும் மாணவர்களுக்கு பாடமாக இருக்க போகிறார் என நினைக்கையில் பெருமையாக உள்ளது என்றனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.