‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (12.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து
கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத்
தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 தமிழர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று
புதன்கிழமை அதிகாலை 5:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை சிறிலங்கா படையினர்
செறிவான எறிகணைத் தாக்குலை நடத்தினர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 19 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே
கொல்லப்பட, 61 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ
சிகிச்சை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நீண்ட தூர போக்குவரத்து, சீரற்ற பாதை, மக்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து
கொண்டிருப்பதால் ஏற்பட்ட நெரிசல், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் என்பவற்றால்
காயமடைந்தோரை மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தாமதமும்
காயமடைந்தோர் அநியாயமாக உயிரிழக்க காரணமாகி விட்டது.

!!!!!!!!!!!!!!!!!

இதேவேளை, தேவிபுரத்தில் இயங்கி வரும் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நேற்று
அதிகாலை 1:00 முதல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் “புதினம்” செய்தியாளர், முழுமையாக
மீட்பு பணிகள் செய்ய முடியாத நிலையில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்
தொடர்ச்சியாக நேற்று வரை நடைபெற்றதால் மருத்துவமனைக்குள் இருக்கும் நோயாளர்களின் நிலை
என்னவென்று தெரியாமல் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் அரசியல் தீர்வின் தேவை குறித்துமே நான்
எனது கவனத்தை செலுத்துகின்றேன். மக்கள் இடம்பெயர்ந்து வருவது தொடர்பாகவும் நாம் கவனத்தை
செலுத்துகின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று புதன்கிழமை பான் கீ மூன் மேலும்
தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு எனது அரசியல் பணிப்பாளரை
அனுப்பியுள்ளேன். மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளுக்கு ஒரு குழுவை நேரம்
வரும் போது அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பாக நியூயோர்க்கிற்கு இரு வாரங்களுக்கு முன்னர் பயணம் மேற்கொண்டிருந்த
சிறிலங்கா அரச தலைவரின் பிரதிநிதியை நான் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். அரச தலைவர்
மகிந்த ராஜபக்சவுடனும் தொலைபேசி ஊடாக உரையாடியிருந்தேன்.

இருந்த போதும், இலங்கை தொடர்பான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில்
விவாதிக்கப்பட மாட்டாது.

இலங்கை மற்றும் காசா பகுதிகளின் நிலமைகள் அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளுக்கு
உட்பட்டவையாக இருந்தல் வேண்டும் என்ற போதும், மனிதாபிமான விதிகள் மீறப்படுவது தொடர்பாக
நான் எனது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்திருந்தேன்.

தற்போதைய வன்முறைகள் தொடர்பாகவும், அரசியல் தீர்வின் தேவை குறித்துமே நான் எனது கவனத்தை
செலுத்துகின்றேன். மக்கள் இடம்பெயர்ந்து வருவது தொடர்பாகவும் நாம் கவனத்தை
செலுத்துகின்றோம் என்றார் அவர்.

!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வவுனியா
நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்களில் 70 பேர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப்
பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்
பலரை காணவில்லை என்றும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 15 பெண்கள் உட்பட 70 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
என்றும் இது தொடர்பில் வவுனியா காவல் நிலையத்திலோ அல்லது மனித உரிமை அமைப்புக்களிடமோ
முறையிட முடியாமல் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நலன்புரி முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை வவுனியாவில் உள்ள உறவினர்கள்,
நண்பர்கள் எவரும் பார்வையிட முடியாது.

இந்நிலையில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு சென்ற அனர்த்த முகாமைத்துவ
அமைச்சின் உயரதிகாரிகள் சிலரின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும்
போதாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படையினரின்
கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடுவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை சென்றவர்களில் 18
வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் பலரை படையினர் தனியாக
அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது
குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பான தகவலை வெளியிட்ட வவுனியா செயலக அதிகாரி ஒருவர் அழைத்து
செல்லப்பட்டவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிப்பதாக
தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!

யாழ்ப்பாணம் வடமராட்சி, கரவெட்டிப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் நேற்று
புதன்கிழமை அதிகாலை முதல் மாலை வரை கடுமையான சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொண்டதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிராமம் பகுதியில் அண்மையில் கொல்லப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உள்ளூர்
பணியாளரின் சமய கிரியைகள் அவரது வீட்டில் நேற்று நடைபெற்றது. அங்கும் படையினர்
துப்பாக்கிகளுடன் சென்று தமது தேடுதல்களை மேற்கொண்டனர்.

ராஜகிராமம் மற்றும் கரணவாய் பகுதிகளில் உள்ள வீடுகளில் தேடுதல்களை மேற்கொண்ட
காவற்துறையினர் குடியிருப்பாளர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்துள்ளனர். எனினும்
எவரும் கைதுசெய்யப்பட்டார்களா என்ற தகவல்கள் வெளியாகவில்லை

!!!!!!!!!!!!!!!

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் பொதுமக்கள் மீது இடம்பெற்றதாகத்
தெரிவிக்கப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் வவுனியா வடக்கு
கல்வி வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் தணிகாசலம் கணேசலிங்கமும் (46 வயது) ஒருவர் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு
வரப்பட்டதையடுத்து, உறவினர்கள் இவரை அடையாளம் காட்டினர்.

மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட அவரது உடல் வவுனியா குட்ஷெட்
வீதியில் உள்ள அவரது உறவினரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல்
இறுதிக்கிரியைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

!!!!!!!!!!!!!!!!!!

வவுனியா மாவட்ட பாடசாலைகள் பலவற்றில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டு,
இடைத்தங்கல் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள்
சீர்குலைந்துள்ளதாகப் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகள் மட்டுமன்றி, கல்வியியல் கல்லூரி, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி
என்பனவற்றின் கல்விச் செயற்பாடுகளும் சீர்குலைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களாக மாற்றப்பட்டுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு மாற்று
ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், இதுவரை எதுவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

!!!!!!!!!!!!!!

இலங்கையில் நடைபெறும் போரினால் பெரும் இரத்தக்களரி உண்டாகி வருகின்றபோதிலும், அந்த
நாட்டின் விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாததால், அங்கு
போர் நிறுத்தம் செய்யுமாறு அரசாங்கத்தை நான் கோர முடியாது.vd தெரிவிக்கிறார் ஐக்கிய
நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன்.

இலங்கையில் நடைபெறும் போரினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விவரங்கள் குறைவாகவே
வெளிப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்த மூன் தாம் நாடுகளின் இறைமையை மதிப்பவர்
என்றும் ஒரு கட்டத்தில் கூறினார். பல வெளிநாடுகளுக்கு விஜயம் செய்த பின்னர் ஐ.நா.
பொதுச் செயலாளர் பான் கீமூன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் உள்ள
தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
அந்த மாநாட்டில் வைத்து “இன்னர் சிற்றி பிறெஸ்” ஊடகத்தின் செய்தியாளர் மத்தி ரஸல் லீ,
பான் கீ மூனிடம் காஸா, கொங்கோ ஆகிய நாடுகளில் போர் நிறுத்தத்தை கோரியது போன்று, ஏன்
பெரும் இரத்தக்களரி உண்டாகியுள்ள இலங்கையில் போர் நிறுத்தம் கோரவில்லை என்று
கேட்டார்.
அப்போதே இலங்கை விவகாரம் குறித்து பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில்
சேர்க்கப்படாமையால் தன்னால் போர் நிறுத்தம் கோர முடியவில்லை என்று பான் கீ மூன்
சொன்னார்.

!!!!!!!!!!!!!!!!

இலங்கை விவகாரம் ஐ.நாவின் பாது காப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமையால் அந்த
நாட்டில் தம்மால் போர் நிறுத்தத்தைக் கோர முடியவில்லை என்று பொதுச் செயலாளர் பான்
கீன் மூன் கூறியது ஏற்புடையதல்ல. இவ்வாறு மறுத்துரைத்திருக்கிறார் பாதுகாப்புச் சபையின்
இந்த மாதத்துக்கான தலைவர் யுகியோ டக்காசு.

நாடு ஒன்றினது அமைதி மற்றும் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும் போது, அது குறித்து
சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும் மிகவும் முக்கியமான பொறுப்பு, ஐ.நா.
சாசனத்தின் கீழ் அதன் பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் பாதுகாப்புச்
சபையின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த யுகியோ டக்காசு.

இதேவேளை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீன் மூனின் அரசியல் பிரிவு இயக்குநர் விரைவில்
இலங்கை வரவிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியே அரசு அமைத்துள்ள மக்கள்
பாதுகாப்பு வலயத்தை சர்வதேச கண்காணிப்பாளர்களைக் கொண்டு கண்காணிக்கும் வாய்ப்புக்
குறித்து இவர் ஆராய்வார் என நம்பப்படுகின்றது என செய்தி ஏஜென்சி ஒன்று தெரிவித்தது.

இலங்கை நிலைவரத்தை நன்றாக அறிந்து கொண்டு இது தொடர்பாக பான் கீன் மூனுக்கு அவர் அறிக்கை
சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!

வடக்குப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களினால் பொதுமக்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் யுத்த
நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறும் கிழக்கு திமோர் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை
அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமன்றி வேறு முறைகளில்
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென கிழக்குத் திமோர் ஜனாதிபதி ஜோசே
ராமோஸ் தெரிவித்துள்ளார்.

ஜோசே ராமோஸ் பிரிவினைவாத போராட்டத்தின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்
எனவும், அவரது ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்விவகாரத்தில் கிழக்குத் திமோர் ஜனாதிபதி தலையீடு செய்வதன் மூலம்
விடுதலைப் புலிகளுக்கும் ஜோசே ராமோஸிற்கும் இடையிலான உறவு வெளிப்பட்டுள்ளதாக அரசாங்கம்
குற்றஞ்சாட்டியுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!

நாடு இக்கட்டான ஓர் சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் வெளிநாட்டு சக்திகளின்
அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாதென மாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
அஸ்கிரிபீட மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர், மல்வத்து பீட மாநாயக்க தேரர்
திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், வேவல்தெனிய மேதாலங்கார தேரர், திவுல்தெனிய ஞாதிஸ்ஸ
தேரர் ஆகிய இலங்கையின் முக்கிய மாநாயக்க தேரர்களினால் இந்த கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டையும், சமாதானத்தையும் நிலைநாட்ட கட்சி பேதமின்றி அனைவரும்
ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்லின மக்களும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருப்பதாகவும், இவ்வாறான
ஓர் பின்னணியில் மக்கள் சௌபாக்கியத்துடன் வாழக்கூடிய ஓர் சூழ்நிலை கிட்டாது எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!

வவுனியா, கணேசபுரம் பகுதியில் உடலின் மேல் பகுதிகள் முற்றாக எரிந்து கருகிய நிலையில்
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவுக்கு மேற்கே கணேசபுரம் அரசினர் பாடசாலைக்கு பின்புறமாக பற்றைக்
காட்டுக்குள்ளிருந்தே இவ்விரு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இரு சடலங்களும் இடுப்பிற்கு மேல்ப் பகுதி முழுவதும் எரிந்து கருகிய நிலையில்
காணப்பட்டன.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்தே அங்கு சென்ற பொலிஸார் இரு சடலங்களையும்
கைப்பற்றி பின்னர் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைத்துள்ளனர

!!!!!!!!!!!!!!!!!

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கமும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவும் என்ன தீர்வினை முன்வைத்துள்ளனரென கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரம சிங்க முல்லைத்தீவினை கைப்பற்றி யுத்தத்தில் வெற்றிபெற்றும்
அரசினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி பொதுச் சந்தையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

போர்வீரர்களின் வெற்றியை நிலைநாட்ட வாக்களியுங்கள் என ஜனாதிபதி வாக்கு கேட்டுள்ளார்.
இன்று போர்வீரர்கள் முல்லைத்தீவினையும் கைப்பற்றியுள்ள நிலையில் இனி ஏன் வெற்றிக்காக
வாக்களிக்க வேண்டும்.

தம்மைப் பலப்படுத்தவே வாக்கு கேட்கின்றனர். மிகின் எயார், கொழும்பில் பாலங்கள் அமைத்தல்
கிராமங்களில் மகநெகும, கமநெகும திட்டங்கள் முலம் அரசாங்கம் பணம் சம்பாதிக்கின்றது
இதற்காகவே வாக்கு கேட்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். ரிவிர பத்திரிகை ஆசிரியர்
தாக்கப்பட்டார். சிரச எரிக்கப்பட்டது. வசந்த கொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர்கள்
தாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர், இதனையே மூன்று வருடமாக இந்த அரசு செய்தது.

இவ்வாறு ஊழல் புரிந்த குடுகாரர்கள், கொள்ளையர்கள், ஏமாற்றுக்காரர்கள், கொலைகளை
மூடிமறைக்க போர்வீரர்களது வெற்றியைக் காட்டி வாக்குக் கேட்கின்றனர். vd ரணில்
விக்கிரமசிங்க கூறியுள்ளார்

!!!!!!!!!!

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிவந்த
தமிழ் அமைப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி தெரிவித்தள்ளது.

அமரிக்காவின் மெரிலான்ட் பகுதியில் செயற்பட்டுவந்த தமிழ் அமைப்பின் சொத்துக்கள்
முடக்கப்பட்டுள்ளது இந்த அமைப்புடன் எந்தவிதமான வங்கிச் செயற்பாடுகளையோ, வர்த்தகச்
செயற்பாடுகளையோ பேணக்கூடாதெனவும் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதொரு அமைப்பே.
அறக்கட்டளைகளை உருவாக்கி நிதிசேகரித்து அவற்றை வன்முறையுடன்கூடிய தமது கொள்கைகளுக்காகப்
பயன்படுத்துகின்றனர். என அமெரிக்க திறைசேரியின் வெளிநாடுகளின் சொத்துக்களைக்
கட்டுப்படுத்தும் அலுவலகத்தின் பணிப்பாளர் அடம் சுய்பின் கூறினார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
வெள்ளைமாளிகையின் உத்தரவுக்கமைய தடைசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கத

!!!!!!!!!!!!!!!

வன்னி பகுதியிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் பொதுமக்கள் மீது எவ்வித
அழுத்தங்களையும் பிரயோகிக்க கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை நிபுணர்
யொலென்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார

அரச படைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் காரணம்
காட்டி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் சிவிலியன்கள் மீது படையினர் அழுத்தங்களைப்
பிரயோகிக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்
தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக சிவிலியன்கள் மீது பிரயோகிக்கப்படும்
அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுத போராட்டங்களின்போது ஒரு தரப்பினரின் யுத்தக் குற்றங்களை காரணம்காட்டி தமது யுத்த
குற்றங்களை நியாயப்படுத்த முடியாதென்பதனை சகலரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென
அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்கள் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு
அமைவாக பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இலங்கை இராணுவத்திற்கு காணப்படுவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.

யுத்த பிரதேசத்திற்கு சுயாதீன ஊடகவியலாளர்களை அனுமதிக்காமையினால் உண்மை நிலவரங்களை
அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார

இதேவேளை பொதுமக்கள் மீது விடுதலை புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்தியதாக
இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தை விடுதலை புலிகள் அமைப்பு மறுத்து நாம் எம்மக்கள்
மீது அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என தெரிவித்து அறிக்கை ஒன்றையும்
விடுத்தனர்.

!!!!!!!!!!!!!!

india

!!!!!!!!!!!

இலங்கையில் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள ராணுவ‌ம் நட‌‌த்‌தி வரு‌ம் கொடூர
தா‌க்குதலை க‌ண்டி‌த்து‌ம், இல‌ங்கை அரசு‌க்கு ம‌த்‌திய அரசு வழ‌ங்‌கி வரு‌ம் ஆயுத
உத‌வியை ‌நிறு‌த்த‌க் கோ‌ரியு‌ம், உடனடியாக அ‌ங்கு போர் நிறுத்த‌ம் செ‌ய்ய
வலியுறுத்தியு‌ம் திருச்சியில் உள்ள இந்திய ராணுவ அலுவலகத்தை மாணவர்கள் இ‌ன்று
முற்றுகையிட்டனர்.

இதனால் அப்பகுதி பெரும் பதட்டத்துக்குள்ளானது. தகவ‌ல் அ‌றி‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர்
‌விரை‌ந்து வ‌ந்து மாண‌வ‌ர்களை கைது செ‌ய்தன‌ர்.

அ‌‌ப்போது, ம‌த்‌திய அரசு‌க்கு எ‌‌திராகவு‌ம், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியு‌ம்
மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்

!!!!!!!!!!!!

இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை இதில்
தலையிட மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின்
துணைக் குழு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன், அமைப்பாளராகச் செயல்படும் இந்த அமைப்பின் கூட்டம்
சென்னையில் நே‌ற்று நடைபெற்றது. இ‌ந்த கூட்டத்தில் நீதிப‌திக‌ள் மோகன், கோகுல
கிருஷ்ணன், பாஸ்கரன், ராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை, சண்முகம் மற்றும் பேராசிரியர்
தனபாலன் ஆகியோரும் இந்த அமைப்பின் செயல‌ர்கள் கி. வீரமணி மத்திய அமைச்சர் ஆ. இராசா,
மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கனிமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இ‌க்குழுவின் முடிவுகள் குறித்து அமைப்பாளர் துரைமுருகன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம்
கூறுகை‌யி‌ல், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள்
எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது நடக்கும் மனித உரிமை மீறலைத் தடுத்து
நிறுத்துவது, தனிப்பட்ட அமைப்பால் முடியாது.

இதை, இந்திய அரசுதான் வலியுறுத்த முடியும். எனவே, ஐ.நா. அமைப்பிடம் மத்திய அரசு
வற்புறுத்த இந்த குழு மத்திய அரசை வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எங்கள்
கோரிக்கை, லட்சியம், விருப்பம் இவற்றை ஏற்றுக் கொண்ட ஒத்த கருத்துக்களைக் கொண்ட சர்வதேச
அமைப்புகளிடமும், உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளிடமும் இது குறித்து
முறையீடு செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிரச்சனையை மகஜர் வடிவில் எடுத்துச் சென்று, சென்னை மற்றும் டெல்லியில் உள்ள உலக
நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் அளித்து அவர்கள் கவனத்தை ஈர்க்கவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் உணர்ச்சிப்பூர்வமான இந்த விடயத்தை எடுத்துச் சென்று
மக்களிடம் தெரிவிப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!

பள்ளிச் சிறுமிகள் உள்பட சுமார் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று குவித்து
சாக்கடையில் வீசிய நிதாரி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

டெல்லி அருகேயுள்ள நொய்டாவின் நிதாரி கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் மொனீந்தர் சிங்.
இவரது உதவியாளர் சுரேந்திர கோலி. இவர்கள் இருவரும் அந்த பகுதியை சேர்ந்த பள்ளிச்
சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். பின்னர், அவர்களது
உடல்களை வீட்டின் பின்புறம் உள்ள சாக்கடையில் வீசி எறிந்தனர். கடந்த 2005-2006ம்
ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்தது.

பள்ளிச் சிறுமிகள் மர்மமான முறையில் அடிக்கடி மாயமானது குறித்து போலீசார் விசாரணை
நடத்தி வந்த நிலையில், மொனீந்தர் சிங்கின் வீட்டின் பின்புறமுள்ள சாக்கடையில் இருந்து
இளம்பெண்களின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

அங்கு தோண்ட தோண்ட பிணக்குவியல்கள் வெளிவந்தன. பள்ளிச் சிறுமிகள் 19 பேர் மற்றும் ஓர்
இளம் பெண் ஆகிய 20 பேரை மொனீந்தர் சிங் கொன்று குவித்தது தெரியவந்தது.

நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவம் குறித்து சிறப்பு நீதிமன்றம்
விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று முதல் கட்ட தீர்ப்பு வழங்கப்படுகிறது. பெண்
குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் இந்த தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, நொய்டா நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

!!!!!!!!!!!

இலங்கை‌த் தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்திய அளவில் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும்
வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வருகிற 25ஆ‌ம் தேதி டெல்லியில் பாராளுமன்றம்
அருகே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எ‌ன்று அ‌கில அ‌கில இ‌ந்‌திய
சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சர‌‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.

!!!!!!!!!!!!

இலங்கை‌த் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாராளுமன்றம் அருகில் நாளை 2 ஆ‌யிர‌ம்
பேருட‌ன் ம.தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உண்ணாவிரத‌ம் இரு‌க்‌கிறா‌ர்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குறைந்த பட்ச வேலைதிட்டத்தில் அறிவித்த எல்லா
வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா
பாடீல் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாடீல்
உரையாற்றும் போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிய பிரதிபா
பாடீல், இந்த அரசு குறைந்த பட்ச வேலை திட்டம் மூலமாக மக்களுக்கு அறிவித்த எல்லா
வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளது. மக்கள் அரசு என்ன கூறியது என்பதை
மட்டும் எடை போடுவதில்லை. அது என்ன செய்தது என்பதை பொறுத்தே எடை போடுகின்றனர்.

இந்த அரசின் பதவிக் காலம் முடியவடைய போகிறது. இந்த தருணத்தில் எல்லா வாக்குறுதிகளையும்
கிட்டத்தட்ட நிறைவேற்றியுள்ளது என்று கூறினார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் குடியரசு தலைவர் உரையில்
அரசின் கொள்கை அறிவிப்பு இடம் பெறவில்லை.

ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் சாதனைகளை பற்றி விரிவாக இடம் பெற்று உள்ளது

!!!!!!!!!!!!!

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா
மேற்கொள்ளும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நடந்த
கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”நாட்டின் பாதுகாப்பு விடயங்கள் கவலை
அளிப்பதாக உள்ளன. நமக்கு பல்வேறு முனைகளில் இருந்தும் சவால்கள் வந்துகொண்டிருக்கின்றன”
என்றார்.

“பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் நமது நிதி மையங்கள் மற்றும்
பொருளாதாரத்தை குறிவைத்துள்ளனர்” என்று குறிப்பிட்ட அவர் “சமீபகாலமாக இந்தியா
எல்லைதாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு
வருகிறது” என்றார்.

“இதற்கான ஓர் மோசமான உதாரணம் தான், சமீபத்தில் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்,”
என்று கூறிய அவர், “பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா
மேற்கொள்ளும்” என்று திட்டவட்டமாக கூறினார்.

!!!!!!!!!!!!

C\kÕ 5 BiÓL[ô] úLW[ Øu]ôs ØRpYo D.úL. SôV]ôÚdÏ G§WôL ¿§Uu\m ûLÕ YôWih ©\l©jÕs[Õ.

SôVô]ôo C\kÕ ®hPûR ¿§Uu\jÕdÏ úTôÄ^ôo Øû\lT¥ ùR¬®dLôRRôp CqYôß ûLÕ YôWih
©\l©dLlThÓs[Õ.

!!!!!!!!!!!!!!!!!!!!

மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவில் பிடிபட்ட அஜ்மல்
அமீர் என்கிற கஸாப் மீது பாகிஸ்தான் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத
சக்திகளுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்தியா அளித்த பின்னரும், அதன் மேல் எந்த
ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பாகிஸ்தான் நாட்களை கடத்தி வந்தது.

இந்நிலையில், இந்த பிரச்சனையில் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் அதிகரித்ததால், இந்தியா
அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தானின் கூட்டுப் புலனாய்வு முகமை ( எப்ஐஏ )
விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், விசாரணை அடிப்படையிலான விவரங்கள் அடங்கிய அறிக்கையை இந்தியாவிடம்
பாகிஸ்தான் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் அது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் எதுவும் தெரிவிக்காத
நிலையில், இந்தியாவிலுள்ளவர்களின் உதவி இல்லாமல் மும்பை தாக்குதல் நடத்தப்பட்டிருக்க
முடியாது என்று பாகிஸ்தான் கருதுவதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று
செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு, மும்பை தாக்குதல் தொடர்பாக
ஊடகங்கள் வாயிலாக தகவல் தெரிவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என
கூறியிருந்தது.

இந்நிலையில், மும்பை தாக்குதல் தொடர்பாக எப்ஐஏ நடத்திய விசாரணையின் அடிப்படையில் கஸாப்
மீது 13 வழக்குகளை பாகிஸ்தான் பதிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களின் தகவலை
மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்தி தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!

world

இந்தோனேஷியாவில் கடந்த இரண்டு நாட்களாக நிலநடுக்கங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று பல்வேறு பகுதிகளில் 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் சேதங்கள் ஏதுமில்லை.
ஆனால் நேற்று அந்நாட்டு நேர‌ப்படி மதியம் 2.34 மணியளவில் ஏற்பட்ட கடும்
நிலநடுக்கத்திற்கு 17 பேர் காயமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்ன‌ர்
விலக்கிக் கொள்ளப்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி கிழக்கு இந்தோனேஷியாவின் சுலாவேசிக்கு
அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி‌ல் 7 ஆக பதிவானது என்று
கூறப்பட்டுள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சில சேதமடைந்தன. பீதியில் பொது மக்கள்
சாலைகளில் ஓடத் துவங்கினர். சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வந்தவுடன் பலர் தங்கள்
உயிர்களை காப்பாற்றிக் கொள்ள மரங்கள் மீது ஏறி அமர்ந்தார்கள் என்று நேரில்
பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் தலௌத் என்ற தீவில் அதிகம் உணரப்பட்டது. மெலோங்குவான் மற்றும் கபருவான்
என்ற இரு ஊர்களில் அதிக சேதம் ஏற்பட்டது.

மருத்துவமனை ஒன்றில் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததால் அங்கிருந்து நோயாளிக‌ள் அவசரம்
அவசரமாக வெளியேற்ற‌ப்ப‌ட்டன‌ர். வேறு ஒரு இடத்தில் திருக்கோயில் கோபுரம் உடைந்து
விழுந்ததாக கூறப்படுகிறது.

20க்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு பல பின்-அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல்
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியோடு தொலைபேசியில் பேசினார்.
அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஹால்புரூக் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரிடம் அவர் தீவிரவாதத்தை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று
வலியுறுத்த உள்ளார். .
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை தொலைபேசியில் தொடர்பு
கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவை தக்க வைத்துக் கொள்ள பாடுபடுவோம் என்று ஒபாமா
அப்போது கூறியதாக வெள்ளை மாளிகையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!

விண்வெளியில் இரண்டு பெரிய தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் மோதிக் கொண்டன. சைபீரியா
அருகே 804 கிலோ மீட்டர் உயரத்தில் விண்வெளியில் இந்த மோதல் நடைபெற்றதாக நாசா
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலின்போது ராட்சத பாறைகள் போன்ற உதிரி பாகங்கள் செயற்கைக்கோள்களிலிருந்து
சிதறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். .
எனினும் இந்த மோதலால் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத்தை மதிப்பிட பல நாட்கள் ஆகலாம் என்று
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்த மோதலால் எந்த
ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் 22ந் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்திற்கும் எவ்வித பாதிப்பும்
ஏற்படாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

1997 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட இரிடியம் செயற்கைக்கோள் மற்றும் 1993 ஆம் ஆண்டு
செலுத்தப்பட்ட ரஷ்ய செயற்கைக்கோள் ஆகியவை மோதிக் கொண்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ரஷ்ய செயற்கைக்கோள் தற்போது செயல்படாமல் உள்ளது. விண்வெளியில் செயற்கைக் கோள்கள் மோதிக்
கொள்வது இதுவே முதல் முறை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!

ஜிம்பாப்வே அதிபருக்கு எதிராக செயற்பட்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன்
ஸ்வாங்கிராய், அதிகாரப்பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரதமராக பதவிப்பிரமாணம்
ஏற்றுள்ளார்.

மோர்கன் ஸ்வாங்கிராய்க்கு, அதிபர் ராபர்ட் முகாபே பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் மோர்கன் ஸ்வாங்கிராய்
வெற்றி பெற்றார். ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்து அவர் அடுத்த சுற்றில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

ஜிம்பாப்வேவின் புதிய அரசாங்கத்திற்கு, தோல்வியடைந்த பொருளாதாரம், காலரா பரவல் மற்றும்
வேலைவாய்ப்பின்மை ஆகியவை பெரும் சவாலாக இருக்கிறது.

பதவிப்பிரமாணம் ஏற்ற பின்னர் பேரணி ஒன்றில் உரையாற்றிய மோர்கன் ஸ்வாங்கிராய்,
பொருளதாரத்தை தான் ஸ்திரமாக்க விரும்புவதாகவும், அரசியல் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்
என்றும் கூறினார்.

!!!!!!!!!!!!

பிரிட்டனில் ஒரு தாசாப்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாதவர்களின்
எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

இருபது லட்சத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையினர் தற்போது இங்கு வேலை இல்லாமல்
இருக்கிறார்கள்.

இது பிரிட்டனின் வேலைவாய்ப்புச் சக்தியின் 6.3 வீதமாகும்.

அதேவேளை பிரிட்டன் தற்போது ஆழமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதாக, பாங் ஒவ்
இங்கிலண்டின் ஆளுனர் மேர்வின் கிங் கூறியுள்ளார்.

வட்டி வீதம் மேலும் குறைக்கப்படாவிட்டால், பிரிட்டனின் பொருளாதாரம் இந்த வருட
நடுப்பகுதியில், இன்னும் அதிகமாக வீழ்ச்சியடையும் என்று அந்த வங்கி தனது புதிய
பொருளாதார எதிர்வுகூறலுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!

1 euro = 147.45sl /63.01in

1us $ =114.05sl /48.74in

1 swiss fr =98.50 sl /42.10in

1uk pound =164..03sl /70.10 in

Leave a Reply

Your email address will not be published.