கடத்தப்பட்ட உக்ரைன் கப்பல் கென்யா சென்றது

கடந்த செப்டம்பரில் கடத்தப்பட்டிருந்த உக்ரைன் பதிவுகொண்ட கப்பல் ஒன்று தற்போது கென்யா சென்று, டாங்கிகள் மற்றும் பிற இராணுவ தளபாடங்கள் கொண்ட தனது பொதியை அங்கு இறக்கத் தயாராகி வருகிறது.

கடத்திச் சென்றவர்களுக்கு முப்பது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான பணயத் தொகை கொடுத்து மீட்கப்பட்டுள்ள இக்கப்பல் மொம்பாஸா துறைமுகத்திற்கு வந்தபோது கென்ய மற்றும் உக்ரைனிய அரசு அதிகாரிகள் அதனை வரவேற்றனர்.

இக்கப்பலில் வந்த முப்பது டாங்கிகள் மற்றும் பல்லாயிரம் தோட்டக்களும் தமது இராணுவத்திற்காக அனுப்பட்டவைதான் என கென்ய அதிகாரிகள் வலியுறுத்தினாலும், இவை தெற்கு சுடானுக்கு செல்ல வேண்டியவை என்று இது குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற ஆணைக்குழு கூறுகிறது.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.