யாழில் சிறிலங்கா படையினரால் 2 இளைஞர்கள் சுட்டுக்கொலை

யாழ். மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலியில் நேற்று சிறிலங்கா படையினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.


திருநெல்வேலி சந்தி பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா படையினர் இந்த இளைஞர்கள் மீது நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்களும் கொல்லப்பட்டனர்.

இரு இளைஞர்களும் தம்மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திய போது பதிலுக்கு துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக சிறிலங்கா படையினர் தெரிவித்துள்ளர்.

கொல்லப்பட்ட இளைஞர்களின் உடலங்கள் யாழ். பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.