தேசநலனை குறிவைக்கும் பயங்கரவாதம்: குடியரசுத் தலைவர்

நாட்டின் தேச நலன் மற்றும் வளர்ச்சியை சீர்குலைக்கும் நோக்கிலேயே பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார்.


நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நகரங்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நமது நாட்டின் தேச நலன்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

எனினும், இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து நாட்டு மக்களை அரசு பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு முனைகளில் இருந்தும் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக பல சவால்களை நாடு எதிர்நோக்கியுள்ளது.

நமது நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சியை சீர்குலைக்கும் நோக்கில் மும்பை, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூரு, அஸ்ஸாம் மற்றும் காபூலில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் பலியானது வேதனைக்குரியது.

இவ்வாறு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தனது உரையில் குறிப்பிட்டார்.

Source & Thanks ; tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.