திரு‌ச்‌சி‌‌யி‌ல் ராணுவ அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது

இலங்கையில் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள ராணுவ‌ம் நட‌‌த்‌தி வரு‌ம் கொடூர தா‌க்குதலை க‌ண்டி‌த்து‌ம், இல‌ங்கை அரசு‌க்கு ம‌த்‌திய அரசு வழ‌ங்‌கி வரு‌ம் ஆயுத உத‌வியை ‌நிறு‌த்த‌க் கோ‌ரியு‌ம், உடனடியாக அ‌ங்கு போர் நிறுத்த‌ம் செ‌ய்ய வலியுறுத்தியு‌ம் திருச்சியில் உள்ள இந்திய ராணுவ அலுவலகத்தை ‌ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவர்கள் ம‌ற்று‌ம் புர‌ட்‌சிகர மாணவ‌ர் இளைஞ‌ர் மு‌ன்‌ன‌ணியை சே‌ர்‌ந்த 117 பே‌ர் இ‌ன்று முற்றுகையிட்டனர்.


இதனால் அப்பகுதி பெரும் பதட்டத்துக்குள்ளானது. தகவ‌ல் அ‌றி‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து அவ‌ர்களை கைது செ‌ய்தன‌ர். இ‌தி‌ல் 85 பேரை கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

அ‌‌ப்போது, ம‌த்‌திய அரசு‌க்கு எ‌‌திராகவு‌ம், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியு‌ம் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

‌இ‌ந்த ‌‌திடீ‌ர் போரா‌‌ட்ட‌த்தா‌ல் ‌திரு‌ச்‌சி ம‌த்‌திய பேரு‌ந்து ‌நிலைய‌ம் மு‌ன்பு 30 ‌நி‌மிட‌ம் போ‌க்குவர‌த்து பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.