ஈழத்தமிழரா….? இலங்கைத் தமிழரா….? – கவிஞர் யுகபாரதி

ஈழத்தமிழர் என்று சொல்லக்கூடாது, இலங்கைத் தமிழர் என்றே கூற வேண்டும் என்கிறார் ஜெயலலிதா, இப்போது உருவாகியுள்ள புதிய அமைப்புகளுக்கும் ஈழத்தமிழர் என்றில்லாமல், இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்றும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நல உரிமைப் பேரவை என்றும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.


இலங்கை என்பதை விட, ஈழம் என்பதே பழமையான சொல். புறநானூற்றுப் புலவர் ஒருவரின் பெயர் ஈழத்துப் பூதந்தேவனார் என்பது. பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலையில் ‘ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்’ என்று ஒரு வரி உள்ளது. முக்கூடற்பள்ளு, மழை வரும் செய்தியை, ‘மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே’ என்று கூறுகிறது. ஈழத்தமிழர் என்று சொல்வதற்கு என்ன தடை நமக்கு ?

எல்லை

சொந்த நாட்டுக்குள்ளேயே எல்லைக் கோட்டை ஏற்படுத்துகிற அரசு, நல்லரசாக இருக்க வாய்ப்பே இல்லை. கிளிநொச்சியைக் கைப்பற்றித் தமிழர்களின் எல்லையைத் தீர்மானித்துவிட்டோம் என்கிறது சிங்கள ராணுவம். இனி வரும் காலங்களில், மொத்த இலங்கையும் தமிழர்களின் வசமாகும்; அப்போது தமிழனின் வீரத்துக்கும் ஆற்றலுக்கும் எல்லையே கிடையாது என்பதை உலகம் மறுபடி உணரும்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.