சூதாட்டம் போல் மாறிய பங்குச் சந்தை: பா.ஜ., கவலை

சென்னை : பா.ஜ., முதலீட்டாளர் அணி கூட்டம், அணியின் தலைவர் செல்லா சீனிவாசன் தலைமையில் சென்னையில் நடந்தது.நாட்டின் முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் தென் மாநிலங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அரவிந்த் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “”நாட்டின் முதலீட்டுச் சந்தை சூதாட்டம் போல் மாறிவிட்டது. “”நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, ஐ.மு., கூட்டணி ஆட்சியில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கான தேசிய மாநாடு வரும் 21ம் தேதி டில்லியில் நடைபெறும்,” என்றார்.

சீனிவாசன் பேசுகையில், “”சிதம்பரம் தலைமையில் இருந்த மத்திய அரசின் நிதி நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதாரமே தற்போது சீர்குலைந்து கிடக்கிறது. எதிர்கால சிந்தனை இல்லாதது, நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்களை செயல்படுத்தியது ஆகியவற்றால் ஏராளமானோர் வேலையிழப்பு, தொழில்துறை தேக்கம், நிறுவனங்களின் ஆட்குறைப்பு என மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. “”பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்படுத்திய வளர்ச்சி, தற்போதைய ஐ.மு., கூட்டணி அரசால் தவறான முறையில் நிர்வகிக்கப்படுகிறது,” என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.