குதிரைப் பாய்ச்சலோடும் புயலின் வேகத்தோடும் இலங்கை பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் – பாவலர் தமிழச்சி தங்கபாண்டியன்

ஒரு குதிரை பாய்ச்சலோடும் புயலின் வேகத்தோடும் இலங்கை பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்கிறோம். துரிதகதியில் இலங்கை பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக சார்பில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றும்பொழுது கூறினார்.


அவர் உரையில்

“இலங்கையில் தமிழர்களும் தமிழச்சிகளும் கொல்லப்படும் போது இங்கு நாம் எதிர்ப்பைக்காட்டுகிறோம்.
பார் அழுத கண்ணீரெல்லாம் பாற்கடலாய் இருக்கிறது.. யார் அழுத கண்ணீரோ கண்ணீர்த்துளியாய் தொடங்குகிறது
இலங்கை… என்றான் ஒரு கவிஞன். ஒரு மொழி பேசுகிறான் என்பதற்காக அந்த இனத்தையே கொன்று குவிக்கிறது சிங்களப்பேரினவாதம்.

அதனால் நாம் கொதித்தெழுகிறோம். ஒரு குதிரை பாய்ச்சலோடும் புயலின் வேகத்தோடும் இலங்கை பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்கிறோம்.

பழைய நிகண்டுகளைப் புதுப்பித்தவர்கள் இலங்கை தமிழர்கள். விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்கள் அவர்கள்.

உலகின் இரண்டாவது நாவலை எழுதியவர்கள் அவர்கள். 1981ல் யாழ்ப்பாணம் நூலகம் அழிக்கப்பட்டு விட்டது. உலகின் மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படும் தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு கிலோ அரிசி ரூபாய் 150க்கும், மண்ணெண்ணை ரூபாய் 350க்கும் கிடைக்காத சூழல்.உலகில் நடக்கும் பல நாடுகளின் பிரச்சனைகளிலும் தலையிட்டு தீர்த்து வைக்கும் மத்திய அரசு உடனடியாக இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் தலையிட்டு அரசியல் தீர்வு காண வேண்டும்.’’ என்றுக் கூறினார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.