வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாதென மாநாயக்கதேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாடு இக்கட்டான ஓர் சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாதென மாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஸ்கிரிபீட மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர், மல்வத்து பீட மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், வேவல்தெனிய மேதாலங்கார தேரர், திவுல்தெனிய ஞாதிஸ்ஸ தேரர் ஆகிய இலங்கையின் முக்கிய மாநாயக்க தேரர்களினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டையும், சமாதானத்தையும் நிலைநாட்ட கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்லின மக்களும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருப்பதாகவும், இவ்வாறான ஓர் பின்னணியில் மக்கள் சௌபாக்கியத்துடன் வாழக்கூடிய ஓர் சூழ்நிலை கிட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.