எம் மக்களை மீட்பதற்கு ஒன்றிணைவோம்: வடக்கு கிழக்கு தாயக தமிழ் மக்களின் வேண்டுகோள்

தமிழ் இரத்த உறவுகள் அனைவரும் விரைந்து ஒன்றிணைந்து செயற்படுங்கள். செயற்படுவோம்.என்று வடகிழக்கு தாயகம் சார்பாக,தமிழ் மக்கள் எங்களின் குரல். என இந்திய தழிழக ஆட்சியாளர்களுக்கும், சகோதர உறவுகளுக்கும், புலம்பெயர்வாழ் தமிழ் சகோதர உறவுகளுக்கும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய தழிழக ஆட்சியாளர்களே சகோதர உறவுகளே! புலம்பெயர்வாழ் தமிழ் சகோதர உறவுகளே!

எமது தேசத்தை சிறிலங்கா சிங்கள அரசு திட்டமிட்டு அழித்து ஒழிக்கின்ற முயற்சியில் எம் இரத்த உறவுகளை நாளாந்தம் நூற்றுக்கணக்கில் பலிகொடுத்து அழிவின் விழிம்பில் சாவதா? மீள்வதா? என்ற போராட்டத்தின் விழிம்பில் எம் தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் உலகம் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களும், இந்திய தமிழ்வாழ் மக்களும் முன்னெடுத்த போராட்டங்கள், எழுச்சிகள் அனைத்துக்கும் பயனற்ற பதிலாகவே அமைந்திருந்தது.

அதுமட்டுமல்ல உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்படும் யுத்த நிறுத்தம் தொடர்பான குரலுக்கும், சிறிலங்கா அரசின் பதில் பயங்கரவாத ஒழிப்பு என்ற பிரச்சாரத்திலும், செயற்பாட்டிலும் தமிழினத்தையே அழிப்பது தான் முடிவாக உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்திய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுடன் சகோதர உறவுகளாலும் முன்னெடுக்கப்பட்ட எழுச்சி செயற்பாடுகளுடன் உலகநாடுகளிலுள்ள புலம்பெயர் வாழ் தழிழர்களும் ஒன்றிணைந்து எமது விடியலை நோக்கி சாவோம்; அல்லது மீள்வோம் என்ற உறுதியான நம்பிக்கையோடு தமிழக வளக்கறிஞர் குழுவினர் வன்னியை நோக்கி புறப்பட்ட செய்தி எமது உள்ளத்துக்கு ஆதரவளித்து வலுவூட்டியது.

அதைத்தொடர்ந்து தமிழ் மக்களின் விடியலுக்காக தங்களின் இனிய உயிர்களை எரீயூட்டி தியாகம் செய்கின்ற தியாகிகளின் இலக்குகளும், பதிலற்ற கேள்விகளாகவே உள்ளது.

இச்செயற்பாடுகள் அனைத்துக்கும் முடிவாக பன்னிரண்டு கோடிக்கும் மேற்பட்ட தமிழினத்தின் வரலாற்றை ஈழத்தில் அழியவிடலாம் ,அழித்து விட்டோம் என்ற நம்பிக்கையில் ஒன்றரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட சிங்கள அரசு கேலிக்கூத்து ஆடுகிறது.

ஆனாலும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த சிங்கள அரசு எத்தணை யுகங்கள் கடந்தாலும் தமிழ் இனத்தையும் தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தையும் அளித்தோ,ஒளித்தோவிட முடியாது என்பதை நிருபிக்க நாம் ஒன்றிணைவோம்.

எமது தழிழக உறவுகளே நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் எம் இனத்தை அழிக்க முடியாது. ஈழத்தையும் ஈழத்தழிழர்களையும் பாதுகாத்தோம் என்ற வரலாற்றை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மன்றாட்டமாக வேண்டி நிற்கின்றோம்.

அனைவரும் புரிந்துகொள்ளுங்கள். மக்களின் மீட்பென்பது தற்போது அடக்கி ஒடுக்கப்பட்டு அழிவு நடைபெறும் இடத்தில் தான் மீட்பின் செயற்பாடுகள் நடைபெறவேண்டும். அதைப்புரிந்து தமிழ் இரத்த உறவுகள் அனைவரும் விரைந்து ஒன்றிணைந்து செயற்படுங்கள். செயற்படுவோம்.

வடக்கு கிழக்கு தாயகம் சார்பாக,
தமிழ் மக்கள்,
எங்களின்குரல்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.