பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அவசரகால ஒன்று கூடல் – கொடிய கரங்களில் சிக்கித் தவிக்கும் எமது உறவுகளைக் காப்போம்.

பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அவசரகால ஒன்று கூடல் நிகழ்வு பிரான்ஸ் நாடாளுமன்ற முன்றலில் இன்று புதன்கிழமை பி.பகல் மூன்று மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

சிங்கள இனவெறி அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும்

சிங்கள இராணுவத்தின் கொடிய கரங்களில் சிக்கித் தவிக்கும் எமது உறவுகளைக் காக்கக்கோரியும்

இலங்கைத் தீவில் உடனடி போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருமாறு பிரான்ஸ் தேசத்திடம் கோரிக்கைவிடுத்தும் அவசர காலஒன்று கூடல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இன்று நடைபெற்ற கண்ட ஒன்று கூடலில் கலந்து கொண்ட மக்கள் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் படங்களைக் கைகளில் தாங்கியவாறும் தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசிசைக் கண்டிக்கின்ற வாக்கியங்களைக் கொண்ட பதாதைகளைத் தாங்கியவாறும் ஈழமண்ணில் சொந்த உறவுகள் படும் அவலத்தை வேதனையை துன்பத்தை வானதிரக் கூவியும் பிரஞ்சு அiசாங்கத்திற்கு புரியவைத்திருந்தனர்.

நாளாந்தம் நூற்றுக் கணக்கான தமிழ்உறவுகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். நாடுவிட்டு நாடு வந்த நாங்கள் நமது உறவுகளுக்காக அவர்களைக் காப்பதற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.

சர்வதேசமே ஒரு முறை ஈழத்தமிழன் நிலையை எண்ணிப்பார். பாரெங்கும் அகதியாய் அலையும் ஈழத்தமிழனுக்கு அமைதியானயான வாழ்வு வேண்டும். பாரிய மனித உரிமை மீறல்களையும் மற்றும் இனஅழிப்பையும் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகளையும் மருத்துவ நிலையங்கள் மீதான தாக்குதல்களையும் பாதுகாப்பு வலையம் என்று கூறிக்கொன்று தாக்குதல்களை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசிற்கு வல்லமை வாய்ந்த சர்வதேச அரசுகள் கண்டனம் தெரிவிக்கவேண்டும் போன்ற தத்தமது எண்ணக்கருத்துக்களை கண்டன ஒன்று கூடலில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.

ஈழத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் மிகமோசமான முறையில் இன்று வரை தொடர்கின்றது. தொடரும் இனவழிப்பினால் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத்தமிழர்கள் உலகின் மனச்சாட்சியைத்தட்டி எழுப்பும் வகையில் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

பிரான்சின் நாடாளுமன்றம் முன்பாக பிரஞ்சுத் தமிழ்மகளிர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு மிகவும் குறுகிய கால இடைவெளியில் பிரெஞ்சுக்காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் பிரஞ்சு ஊடகங்கள் பல இந்த கண்டன நிகழ்வில் கலந்து கொண்டு செய்திகளைச் சேகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : lankasri.com

Leave a Reply

Your email address will not be published.