மும்பை தாக்குதலில் உள்நாட்டு சதி : குஜராத் முதல்வர் மோடி கருத்துக்கு சிதம்பரம் கண்டனம்

புதுடில்லி : மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்‌த தாக்குதலுக்கு உள்நாட்டில் சிலர் உதவியிருக்க வாய்ப்புள்ளது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிதம்பரம் கூறியதாவது : மும்பை தாக்குதலில், உள்ளநாட்டு சதி பின்னணி இருக்கிறது என்று மோடி கூறியிருப்பது அப்த்தமானது . ஒரு வேலை மோடிக்கு பாகிஸ்தானில் இருக்கும் யாரேனுடன் தொடர்பு இருக்கிறதோ என்னவோ ? இது குறித்து நீங்கள் அவரிடம் தெளிவாக கேட்டறி‌ய வேண்டும். இவ்வாறு சிதம்பரம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சிதம்பரத்தின் இந்த அறிக்கை குறித்து நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாவது : எனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இவ்வளவு பெரிய தாக்குதலை இந்தியாவில் தைரியமாக நடத்தியிருக்கிறது என்றால், அதற்கு உள்நாட்டில் இருந்து ஏதாவது ஒரு வகையில் உதவி கிடைத்திருக்க வேண்டும் என்று தான் கூறினேன் என தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் குறித்து அளிக்கப்பட்ட ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் பதிலறிக்கையை இதுவரை அளிக்கவில்லை என தெரிவித்த சிதம்பரம் , அல்கைதா போன்ற அமைப்புகளின் மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது என்றும் , தாக்குதலை சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.