சமாதானத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்கும் சதித்திட்டங்கள் தோற்கடிக்கப்படும் – ஜனாதிபதி

நாட்டின் சமாதானத்தின் பெருட்டு முன்னெடுத்துச் செல்லப்படும் உயிரோட்டமுள்ள பயணத்தை தடுப்பதற்கு சூழ்ச்சியுடன் செயற்படும் அனைத்து சக்திகளும் தேற்கடிக்கப்படும் என ஜபாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.


கண்டி கெட்டம்பே மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

1815 ஆண்டு மக்கள் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீண்டும் பெற்றுக்கொடுக்க தமது அரசாங்கம் முழு வேகத்துடன்; செயற்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்தி மட்டுமன்றி நாட்டின் கௌரவத்தையும் பாதுகாத்து புது யுகம் படைக்க தாம் உறுதியளிப்பதாகவும் ஜனாபதிபதி இதன் போது தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.