நாட்டு மக்கள் பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை – ரணில்

இந்த நாட்டு மக்கள் பொருளாதார யுத்தம் ஒன்றிற்கு முகம் கொடுக்கும் காலம; அதிக தூரத்தில் இல்லை என எதிக்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
சிலாபம் ஹரேத்திர கொரையா விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம்; தற்போது யுத்தத்திற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்து அதை முன்னெடுத்து செல்கின்றது.

இதன் காரனமாக நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வில்லை என எதிக்கட்சி தலைவர் குற்றம் சுமத்தினார்.

யுத்தம் குறித்து பேசி மக்களின் கவனத்தை திசைத்திருப்ப அரசாங்கம்முனைகிறது. எனினும் மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இது குறித்து அவதானம் செலுத்தாவிட்டால் பெரும் பிரச்சினை உருவெடுப்பதை தடுக்க முடியாது.

இந்த நிலையில் செல்லுமானால் யுத்தம் நிறைவடைந்துவிடும் ஆனால் பொருளாதார யுத்தம் ஒன்றிற்கு நாட்டு மக்கள் முகம்கொடுக்கும் நிலை உருவாகும் என எதிpர் கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

Source & Thanks : .tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.