பயங்கரவாதிகள் சொர்க்கம் பாகிஸ்தான் : நடவடிக்கை பாயும் என ஒபாமா எச்சரிக்கை!

வாஷிங்டன் : “பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நாட்டின் பழங்குடியின பகுதிகள் அல்- குவைதா மற்றும் தலிபான்களின் சொர்க்கமாக இருப்பதை அனு மதிக்க மாட்டோம்’ என, அமெ ரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த ஜனவரி 20ம் தேதி அமெ ரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றார்.

பதவி யேற்ற பின் முதன்முறையாக நிரு பர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தொடர்பான அமெ ரிக்காவின் கொள்கைகளை எனது புதிய நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்து வருகிறது. பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகள் தலிபான்கள் மற்றும் அல்-குவைதா அமைப்பினரின் சொர்க்கமாக மாறுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதனால், பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்., அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது விசேஷ தூதர் ரிச்சர்டு ஹோல்புரூக்கி, தற்போது இஸ்லாமாபாத் சென்றுள்ளார். எனது இந்த எச்சரிக்கையை அவர் பாகிஸ்தான் அரசிடம் தெரிவிப்பார். ஈரானுடனான உறவுகள் விவகாரத்தில் வரக் கூடிய மாதங்களில் புதிய அணுகு முறையை பின்பற்ற உள்ளோம். அதன் ஒரு பகுதியாக நேரடி பேச்சுவார்த்தையும் நடக்கலாம். குறைந்தபட்சம் இரு நாட்டு உறவுகளில் பரஸ்பர மரியாதை மற்றும் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெ ரிக்கப் படைகளை வாபஸ் பெறு வது தொடர்பாக, கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பகுதிகளில் தான் அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கர வாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இந்த விஷயத்தில் ஆப்கனில் உள்ள ஹமீத் கர்சாய் தலைமை யிலான அரசும் கண்டு கொள்ளா மல் இருப்பது சரியல்ல. இவ்வாறு ஒபாமா கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.