படையினரின் புதிய வகைப் படுகொலை: இன்று 17 பேர் சுட்டுக்கொலை

நேற்று தற்கொலைத் தாக்குதல் எனப் புதிய கதையொன்றைக் கட்டவிழ்த்துவிட்டு, தப்பிவரும் மக்கள் மீது தமது வன்முறைக்கு வழிதேடிக்கொண்டுள்ள சிறீலங்காப் படையினர், இன்று நடத்திய தாக்குதலில் 17 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அகோர எறிகணை மற்றும் வான் தாக்குதலில் இருந்து தப்பி இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்து வந்தவர்கள் மீது படையினர் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளனர். இதன்போது கொல்லப்பட்ட இரு குழந்தைகள் உட்பட 17 பேரது உடலங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள படைதரப்பு, 69 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அத்துடன், தற்போது படையினர் வசம் அகப்படுபவர்கள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர். ஹிட்லிரின் இன அழிப்புக் காலத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் இவ்வாறே தரம் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு விதங்களில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks ; lankasri.com

Leave a Reply

Your email address will not be published.