முல்லைத்தீவு செல்ல முயன்ற 14 வக்கீல்கள் நடுக்கடலில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து முல்லைதீவுக்கு புறப்பட்டு சென்ற கரூர் வக்கீல் சங்க தலைவர் உள்பட 14 பேரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடுக்கடலில் கைது செய்தனர்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் படகில் முல்லைத்தீவுக்கு செல்வோம் என வக்கீல்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்கள் துறைமுக கிரின்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கரூர் வக்கீல் சங்க தலைவர் முருகையா, செயலாளர் நடேசன், துணை தலைவர் முகமது பசல்லுல்ஹக், நெடுஞ்செழியன், லட்சுமணன், முருகேசன், சுதாகர், சின்னசாமி, தூத்துக்குடி வக்கீல்கல் வேல்சாமி, ரகுராமன், ராமசந்திரன், செல்வம், ஹரிகரன், பொன்ராஜ் ஆகிய 14 பேர் துறைமுகம் மீனவர் காலனி பகுதியில் இருந்து ஒரு நாட்டு படகில் ஏறி முல்லைதீவு செல்வதற்காக புறப்பட்டனர்.

படகை செந்தில்வேல், மலைசெல்வம், ஆகியோர் ஓட்டிச் சென்றனர். அவர்கள் கரையில் இருந்து சுமார் 3 கி.மீ., தொலைவில் சென்று கொண்டிருந்த போது இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் ரோந்து படகில் விரைந்து வந்து 14 வக்கீல்களையும் கைது செய்தனர்.

அவர்களை கரைக்கு கொண்டு வந்து தெர்மல் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.