கொழும்பு டாம் வீதியில் தப்பிச்செல்ல முயன்றதாக தமிழ் இளைஞர் நேற்று சுட்டுக்கொலை

கொழும்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் வழியில் புறக்கோட்டை டாம் வீதியில் வைத்து தப்பிச்செல்ல முயன்றபோது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

விடுதலைப்புலி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த மேற்படி தமிழ் இளைஞர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைவிலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது புறக்கோட்டை டாம் வீதியில் வைத்து அந்த சந்தேக நபர் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் ஜீப் அப்பகுதியில் குடை சாய்ந்துள்ளது.

அந்தவேளையில் சந்தேகநபர் தப்பியோட முனைந்த போது பாதுகாப்பாக வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது சந்தேகநபர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்.

காயமடைந்த உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் கொல்லப்பட்ட அந்த இளைஞனின் பெயர் விபரத்தையும் அவர் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதையும் பொலிஸ் பேச்சாளர் கூற மறுத்துவிட்டார்.

Source & Thanks : newlankasri.com

Leave a Reply

Your email address will not be published.