விமானம்-ஹெலிகாப்டர் மோதல் தவிர்க்கப் பட்டதால், 150 பேர் உயிர் தப்பினர்

மும்பை: மும்பையில் ஏர் இந்திய பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் நேருக்கு நேராக மோத இருந்த விபத்து தவிர்க்கப் பட்டதால் 150 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஐ.சி 866 ஏர் இந்திய விமானம் 150 பயணிகளை ஏற்றிக் கொண்டு, டில்லி நோக்கி செல்ல தயாரானது. இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்ள இருந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க மூன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப் பட்டது. பயணிகள் விமானம் செல்ல இருந்த அதே நேரத்தில், ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்காக வரவழைக்கப் பட்ட ஹெலிகாப்டரும் அதே ஓடுபாதையில் வரவழைக்கப் பட்டது. இதனால், விமானமும்-ஹெலிகாப்டரும் நேருக்கு நேராக மோத இருந்தன. விமானி ஹெலிகாப்டரை பார்த்து விட்டதால், நடக்க இருந்த பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில், விமானம்-ஹெலிகாப்டரும் ஓடுதளத்தில் வர அனுமதிக்கப் பட்டது குறித்து விசாரணை நடந்த மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.