17ம் தேதி தமிழக பட்ஜெட்-சலுகை மழை இருக்கும்

சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே வரும் ஆண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பட்ஜெட்டில் பல சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் வரும் 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த நாளான 17ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் குறித்து கடந்த வாரம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூடி விவாதித்தது. பின்னர் நிதியமைச்சர் அன்பழகன் அதிகாரிகளுடன் பட்ஜெட் குறித்து ஆய்வு கூட்டங்களை நடத்தினார்.

மார்ச் மாத இறுதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கலாம் என்று தெரிகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இலங்கை பிரச்சனை வெடிக்கலாம்.

மேலும் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற தோழமை கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதால், இந்த கூட்டத் தொடரில் மிகக் கடுமையான எதிர்ப்பை ஆளும்கட்சி சந்திக்கவுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.