காதலர் தினம் எதிரொலிரோஜா ஏற்றுமதி உயர்வு

சென்னை : காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி நெருங்குவதை தொடர்ந்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்களிலிருந்து, ரோஜாப் பூக்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டிட்கோ) தலைவர் ராமசுந்தரம் கூறியிருப்பதாவது: டிட்கோ மற்றும் எம்.என்.ஏ., என்ற ரோஜா வளர்ப்பு தொண்டு நிறுவனம் இணைந்து ஓசூர் அருகே அமுதகொண்டபள்ளியில், 125 ஏக்கர் பரப்பில், ரோஜா வளர்ப்பு பண்ணையை அமைத்துள் ளோம். இங்கு கடந்த ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் ரோஜா வளர்க்கப் பட்டது. இந்த ஆண்டு 3 கோடி ரோஜா வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்காக புதிய வகை ரோஜாக்களை அறிமுகப்படுத்துவோம். இந்த ஆண்டு ஐரோப்பாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ள ‘தாஜ்மஹால்’ ரோஜாவை அறிமுகப்படுத்துகிறோம். ஐரோப்பா மட்டுமல்லாமல், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், யு.ஏ.இ., ஆகிய நாடுகளுக்கும் ‘தாஜ்மஹால்’ ரோஜா ஏற்றுமதி செய்யப் படவுள்ளது. லெபனான் நாட்டிலிருந்தும் ‘தாஜ்மஹால்’ ரோஜாவிற்கு ஆர்டர்கள் வந்துள்ளன. ஒரு தாஜ்மஹால் வகை ரோஜா 25 முதல் 28 ரூபாய் விலையில் விற்கப்படும். அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள கோகினூர் வகை ரோஜாவிற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ராமசுந்தரம் கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.