மலேசியாவில் புலம்பெயர் தமிழர் ஒருவர் தீக்குளித்து மரணம்

மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தீக்குளித்து மரணமாகியுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்த ராஜா (வயது 27) என அழைக்கப்படும் இவர், ஈழத் தமிழர் துயர்கண்டு பொறுக்க மாட்டாமல் தான் வழமையாக வழிபாட்டுக்குச் செல்லும் முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே தனது உயிரை தீக்குளித்து மாய்த்துக்கொண்டார்.

“உலகத் தமிழர்களை நம்பி நான் தீக்குளிக்கிறேன், இலங்கையில் தமிழ் மக்களை உடனே காப்பாற்றவும், அமெரிக்க அரச தலைவர் ஒபாமா இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்யவும்” என தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துவிட்டு ராஜா தீக்குளித்துள்ளார்.

தீக்குளித்து உயிர்நீத்த ராஜா எழுதி வைத்துள்ள நாட்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எனது பெயர் ராஜா. 1982 ஆம் ஆண்டு மே மாதம் 27 இல் பிறந்தேன்.

2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் வேலை தேடி மலேசியாவுக்கு வந்தேன்.

எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பிறகு நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

உடனடியாக அங்கு அமைதிப் பேச்சுக்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த செயலில் ஈடுபட்டேன் என்று எழுதியுள்ளார்.

ராஜாவின் தீக்குளிப்பு மலேசியாவிலும், புலம்பெயர் நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.