கேரளா எம். எல். ஏ., மகள் தாக்கப்பட்ட விவகாரம் , கர்நாடக அரசுக்கு எதிரான திட்டமிட்ட சதி : எடியூரப்பா புகார்

பெங்களூரு : கேரளா எம். எல். ஏ., மகள் தாக்கப்பட்ட விவகாரம் , கர்நாடக அரசுக்கு எதிரான திட்டமிட்ட சதி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

மங்களூருவில் ஆண் நன்பருடன் வந்த கேரள எம். எல். ஏ., மகள் கடத்தி செல்லப்பட்டு மர்மநபர்களால் அடித்து, துன்புறுத்தி எச்சரித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா , கேரள மாநில எம்.எல்.,ஏ., மகள் தாக்கப்பட்டுள்ளது, கர்நாடக அரசு மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே, சில விஷமிகள் திட்டமிட்ட செய்த சதி. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ராமசேனா அமைப்பு, இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இளம் பெண்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து பேசியுள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி, கர்நாடாகாவில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு விட்டதாக கூறியுள்ளார்.

கேரள மாநிலம், மஞ்சேஸ்வரம் தொகுதி கம்யூ எம். எல். ஏ., குன்கம்பு. இவரது மகள் , காதலனுடன் மங்களூரு மங்களாபுரத்தில் இருந்து பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது ராமசேனா தொண்டர்கள் இருவரையும் பஸ்சில் இருந்து வெளியில் இழுத்து தரக்குறைவான வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தனர் . பின்னர் அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி சென்றனர். வழியில் அவர்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது. மஞ்சேஸ்வரத்தில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் எம்.எல்.ஏ., மகளை இறக்கி விட்டு சென்றனர். ஆனால் அவருடன் கடத்திச் செல்லப்பட்ட ஆண் நன்பர் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

கேரளா எம். எல். ஏ., மகள் தாக்கப்பட்ட விவகாரத்தில், கர்நாடகா மாநிலத்துக்கு கேரளா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தால், இரு மாநிலங்களிலும் பரபரப்பு நிலவுகிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.