வலுவான நிலையில் பாக்., பயங்கரவாத அமைப்புகள்: தீபக்கபூர்

புதுடில்லி : பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில், வலுவான நிலையில் இருக்கின்றன, சுதந்திரமாக இயங்குகின்றன என இந்திய ராணுவ தளபதி தீபக்கபூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் 30 முதல் 50 பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன என அவர் கூறியுள்ளார். பாக்., தரப்பில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக காட்டிக் கொள்ளப்படுகிறதே தவிர உண்மையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. கடந்த 2005ம் ஆண்டில் பாகிஸ்தானில் 30 பயங்கரவாத அமைப்புகள் இருந்தன. ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது . பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவவதற்கு புதிய வழிகளை கண்டுபிடித்துள்ளனர். தறபோது அவர்கள் நேபாள் வழியாக வருவதையும், வங்கதேசம் வழியாக வருவதையுமே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து ராணுவ தளப‌தி தீபக்கபூர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks :dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.