கஸாப் தொடர்பை உறுதிபடுத்தியது டிஎன்ஏ ஆதாரம்

மும்பை: மும்பை குண்டுவெடிப்பில் கஸாபின் டிஎன்ஏ சோதனையில் அவருக்கு தொடர்பு இருப்பது தடவியல் துறையினரின் டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த சில தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதில் கஸாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் மும்பை வர பயன்படுத்திய கூபர் என்ற படகு கைப்பற்றப்பட்டது. தாக்குதலுக்கு சில தினங்களுக்கு முன்னர் தாங்கள் இப்படகை கடத்தியதாகவும், கராச்சியில் இருந்து அல்-ஹீசைனி என்ற படகில் வந்து பின்னர் நடுக்கடலில் இக்கப்பலுக்கு மாறியதாகவும், அதற்கு பாகிஸ்தான் கடற்படை உதவியதாகவும் கஸாப் வாக்குமூலம் கொடுத்திருந்தான்.

ஆனால் மும்பை தாக்குதல் சம்பவத்தில் தங்களுக்கு பங்கு இல்லை என மறுத்த பாகிஸ்தான், கஸாப் பாகிஸ்தானை சேர்ந்தவர் அல்ல என கூறியது.

இந்நிலையில் இந்திய தடவியல் துறை தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கஸாபுக்கு கலினா தடவியல் மையத்தில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. அவரின் டிஎன்ஏவுக்கும், தீவிரவாதிகள் மும்பை வர பயன்படுத்திய கூபர் படகில் கிடைத்த கோட் ஒன்றின் வியர்வையில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும் ஒரே நபருக்கு உரியது என்பது கண்டுபிடிக்கப்பட்டது என்கிறது.

இதையடுத்து கஸாப் படகில் வந்த போது அந்த கோட்டினை அணிந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்து போன சில தீவிரவாதிகளின் டிஎன்ஏவும் இங்கு சோதிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் தங்களுக்கு தொடர்பு இல்லை என கூறி வரும் பாகிஸ்தானின் போலி வேஷம் மீண்டும் ஒருமுறை அம்பலமாகி உள்ளது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.