25 சதவீத பங்குகளை ரூ.2,000 கோடிக்கு விற்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் முடிவு

புதுடில்லி : கம்பெனியின் நிர்வாகம் மற்றும் நிதித்துறையை சீரமைக்கும் விதமாக, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அதன் 25 சதவீத பங்குகளை ரூ.2,000 கோடிக்கு விற்க முடிவு செய்திருக்கிறது.

மேலும் ரூ.6,400 கோடி கடன் பெறுவதற்கு, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸூக்கு முதலீட்டு ஆதாரமாக இருக்கும் யுனைட்டட் பிரேவரீஸ் நிறுவனத்திடமிருந்து கார்பரேட் கியாரண்டி பெறவும் முடிவு செய்திருக்கிறது. மேலும் நிர்வாக சீரமைப்பு காரணமாக அவர்களிடம் அதிகப்படியாக இருக்கும் விமானங்களை திருப்பி கொடுக்கவும், ஆர்டர் கொடுத்த புதிய விமானங்களை தாமதமாக பெற்றுக்கொள்வது என்றும் தீர்மானித்திருக்கிறது. இந்திய விமான கம்பெனிகளில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு, அதன் கொள்கையில் மாறுதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதுவரை பங்குகளை விற்பதற்கு காத்திருப்பது என்று கிங்ஃபிஷர் முடிவு செய்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மும்பை பங்கு சந்தையில் நேற்று இருந்த கிங்ஃபிஷரின் பங்கு மதிப்பை அடிப்படையாக வைத்து பார்த்தால், இப்போது அதன் சந்தை முதலீடு ரூ.865.53 கோடி என்றும், அதன் மொத்த மதிப்பு ரூ.8,000 கோடி என்றும் சொல்லப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், அது ஆர்டர் செய்திருந்த பெரிய சைஸ் விமானங்களை 2012 க்கு முன் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் இதன் மூலம் அதன் வெளிநாட்டு விமான சேவை முயற்சி தாமதம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதத்துடன் முடிந் த ஆறு மாத காலத்தில், கிங்ஃபிஷரின் வர்த்தகம் 21 சதவீதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அது குத்தகைக்கு வாங்கியிருந்த விமானங்களை திருப்பி கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே சில விமானங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. டிசம்பருடன் முடிந்த மூன்றாவது காலாண்டில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.626 கோடி நஷ்டமடைந்திருக்கிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.