தொடரும் தமிழர் படுகொலை: வன்னிக் கொலைக்களத்தில் வெள்ளிக்கிழமை 48 தமிழர்கள் பலி்; 174 பேர் காயம்

வன்னியில் இன்று சிறிலங்கா படையினர் பரவலாக நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 174 பேர் காயமடைந்துள்ளனர்.

மாத்தளான்

முல்லைத்தீவு மாத்தளான் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கித் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 13 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரம்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 12:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுவர்களான சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேவிபுரம் ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களின் குடிசைகள் மீது இன்று முழு நாளும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம்

முல்லைத்தீவு சுதந்திரபுரம் வீட்டுத்திட்டம் மீது இன்று பிற்பகல் 4:35 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதலில் 6 தமிழர்களை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு

முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதி மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்ளை நடத்தியதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உடையர்கட்டு

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வள்ளிபுனம்

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதி மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மூங்கிலாறு, உடையார், வள்ளிபுனம் ஆகிய மூன்று இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் மட்டும் மொத்தமாக 64 பேர் காயமடைந்துள்ளனர்.

Source & Thanks ; puthinam .com

Leave a Reply

Your email address will not be published.