பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் : 7 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் , பழங்குடியினர் வாழும் பகுதியான கைபர் பகுதியில், இன்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்தனர் . கைபர் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த ஒரு நபரை பாதுகாப்பு படையினர் , சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் குண்டுகளை வெடிக்கச்செய்தார். இதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.