சொமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட உக்ரைன் கப்பல் விடுவிக்கப்பட்டது

சொமாலிய கடற்கொள்ளையர்கள் இராணுவ உபகரணங்கள் நிரம்பியிருந்த உக்ரைன் கப்பலை விடுவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பரில் இக்கப்பலை அவர்கள் பிடித்திருந்தனர்.

இந்தக் கப்பலின் சிப்பந்திகள் இருபது பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் எம்.வி.ஃபைனா என்ற இக்கப்பல் தற்போது அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முப்பது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகையை இந்தக் கப்பலின் உரிமையாளர்கள் கடற்கொள்ளையர்களுக்கு கொடுத்ததாக செய்திகள் வெளியான மறுநாள் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் வந்த யுத்த டாங்கிகள், ராக்கெட் ஏவு கருவிகள் மற்றும் சிறு ஆயுதங்கள் போன்றவை தங்களுக்காக அனுப்பட்டிருந்தவை என்று கென்யா கூறுகிறது. ஆனால் இத்தளபாடங்கள் தெற்கு சுடானிய அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தவை என்பதாக ஆவணங்கள் காட்டுகின்றன.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.