மாவோயிஸ்டுகளுக்கு எதிரான புதிய ஆயுதம்

இந்தியாவின் கிழக்கிலே மாவோயிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் புதியதொரு ஆயுதம் பற்றிய விபரங்களை அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கைத் தொலைபேசிகளே அந்தப் புதிய ஆயுதங்களாகும். மாவோயிய கெரில்லாக்களின் நடமாட்டம் குறித்து உடனடியாக தகவல் தருவதற்கு பிரதிபலனாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருநூறு கிராமங்களுடைய தலைவர்களுக்கு புதிய மொபைல் ஃபோன்களை அரசு அதிகாரிகள் வழங்கிவருகிறார்கள்.

இத்திட்டம் ஏற்கனவே பலனளிக்கத் துவங்கியுள்ளது என ஜார்க்கண்டிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். கைத் தொலைபேசி அலைபரப்பு கோபுரங்களுக்கு வெடிவைப்பது அல்லது கிராமத் தலைவர்களை தாக்குவது போன்ற காரியங்களை செய்து கிளர்ச்சிக்காரர்கள் பதிலடி தர முற்படலாம் என்றும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.