தா.பாண்டியன் கார் எரிப்பு – ஜெ., ராமதாஸ், வைகோ கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள தா.பாண்டியன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை, விஷமிகள் சிலர் நேற்று இரவு தீவைத்து எரித்து விட்டனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷமச் செயலுக்குக் காரணமானவர்களை, காவல்துறை கண்டு பிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.