சங்கரன்கோவிலில் புத்த பிட்சுகள் இன்று முதல் உண்ணாவிரதம்

சங்கரன்கோவில்: இலங்கையில் அமைதி உருவாக வேண்டி சங்கரன்கோவில் காந்தி மண்டபத்தில் புத்த பிட்சுகள் இன்று முதல் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள வீரிருப்பில் உள்ள புத்த ஆலயத்தை சேர்ந்த புத்தபிட்சு இஸ்தானிஜி கூறுகையில், புத்த தேசமான இலங்கையில் புத்தரின் கொள்கைகளை கடைபிடிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

உயிர் வதை மற்றும் கொல்லாமை போன்ற மிக உன்னதமான புத்த நெறிமுறைகளை இலங்கையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில் புத்தபிட்சுகள் சங்கரன்கோவில் சுவாமிசன்னதியில் உள்ள காந்தி மண்டபத்தில் இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

உண்ணாவிரதத்தில் பிட்சுகள் லீலாவதி பிட்கு, கிமுரா ஜான், தாமரை கழக தலைவர் வீரபாகு, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா, மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.