சுவிஸ் வெளிவிவகார அமைச்சு யுத்தநிறுத்தத்திற்கு கோரிக்கை

இலங்கைத்தீவில் வடக்கு பகுதியில் இடம்பெறும் மனிதபேரவலம் குறித்து சுவிஸ் ஆழ்ந்த கவலை கொள்வதாகவும் யுத்தத்தில் ஈடுபடும் இருதரப்பும் மனிதஉரிமைகளை மதித்து யுத்த நிறுத்த்திற்கு கோர வேண்டும் எனவும் கேட்க்கப்பட்டுள்ளது.

இவ்யுத்தத்தினுள் 200 000 பொதுமக்கள் சிக்குண்டுள்ளதாகவும் யுத்தசர்வதேச விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தேவைக்கு அதிகமான அளவில் பலப்பிரயோகம் மேற்கொள்வது ஏற்கனவே பெருமளவு மனித உயிர்களை காவுகொள்வதற்கு ஏதுவாகியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு சென்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எய்தப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் கடந்த 37 வருடங்களாக இலங்கை தீவின் வடக்கு கிழக்கில் பகுதியில் தனிநாடுகோரி போராடிவருவதாகவும் அவிவஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.