தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: லோக்சபா தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொண்டது.

லோக் சபா தேர்தல் தொடர்பான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

முதலில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, குரேஷி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து நேற்று அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.

இன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் ஆகியோருடன் 3 ஆணையர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தினால் பாதுகாப்பு அளிக்க முடியுமா, வாக்குச் சாவடிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

நாளையும் ஆலோசனைக் கூட்டம் தொடருகிறது.

இன்றைய கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, டிஜிபி கே.பி.ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.