வடக்கு வசிரிஸ்தானில் ஒழிந்துள்ளார் மசூத் அசார்

கராச்சி: இந்தியாவால் தேடப்பட்டு வரும் ஜெய்ஸ்-இ-முகமது தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானில் உள்ள வசிரிஸ்தான் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய அரசு தங்களால் தேடப்பட்டு வரும் 20 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாகவும் அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டு வருகிறது. ஆனால், இதுவரை சில தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக கூறும் பாகிஸ்தான் இந்தியா கேட்ட தீவிரவாதிகள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியாவுக்கு தகவல் கிடைத்துள்ளன. இவர் வடக்கு வசிரிஸ்தானில் சகல வசதிகளுடன் சௌகர்யமாக இருப்பதாக தெரிகிறது.

இப்பகுதியை நிர்வகித்து வரும் ஜலாலுதீன் ஹக்கானி கடந்த 2008 ஜூலையில் காபூலில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்பு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.