படையினரது இரத்த வெள்ளத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளன: எஸ்.பி. திஸாநாயக்க

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இராணுவப் படைவீரர்களது இரத்த வெள்ளத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் மூடிமறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை காரணம் காட்டி மாகாணசபைத் தேர்தல் வாக்குகளை கொள்ளையிட ஜனாதிபதி முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹரிஸ்பத்துவ மற்றும் ஹக்குரண பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை உரிய முறையில் முன்னெடுப்பதற்கும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை காரணம் காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்கு வேட்டையில் ஈடுபட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கு அனுமதியளிக்கப்படக் கூடாதெனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.