ராஜு கலெக்ஷன்: 321 ஜோடி ஷூ, 310 பெல்ட், 1000 சூட்… அடேங்கப்பா!

ஹைதராபாத்: இந்த விவரங்கள் தேவையா என்று கேட்கத் தோன்றும். ஆனால் ராமலிங்க ராஜுவை விசாரிக்கும் ஆந்திர மாநில புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகள் இவை.

ஒரு அதிகாரப்பூர்வ அரசுத் தரப்பு புலனாய்வு நிறுவனம் தனது முதல்கட்ட விசாரணையில் என்னென்ன கண்டுபிடித்துள்ளது என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ராஜுவின் ஆடம்பர வாழ்க்கை, தனிப்பட்ட முறையில் அவர் செய்துள்ள செலவுகள் நிறுவனத்தை எப்படியெல்லாம் பாதித்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே இந்த விவரங்கள் என ஆந்திர மாநில போலீஸ் அறிவித்துள்ளது.

சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு பயன்படுத்திய ஷூக்கள் 321 ஜோடி. மொத்தம் 310 பெல்டுகளை அவர் உபயோகித்துள்ளார்.

அவரிடம் இருந்த டிசைனர் சூட்டுகள் மட்டும் 1000-க்கும் மேல். இவரது வீட்டில் ஒரு காஸ்ட்லி டெலஸ்கோப் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ராஜுவின் விருப்பமான பொழுதுபோக்கு உலகம் முழுக்க சுற்றி தனக்குப் பிடித்த வித்தியாசமான மாளிகைகளை வாங்குவதாம். இது போல அவர் மொத்தம் 63 நாடுகளில் விதவிதமான வடிவமைப்பில் மாளிகைகளை வாங்கி தனது விருந்தினர் இல்லங்களாக வைத்துள்ளாராம்.

ராஜுவுக்கு இருந்த இன்னொரு பழக்கம் கோயில் கோயிலாக விசிட் அடிப்பது. தனது விருப்பமான அனைத்துக் கோயில்களுக்கும் தங்கத்தை வாரிக் கொடுத்திருக்கிறாராம். இப்படி அவர் அளித்துள்ள தங்கத்தின் அளவு மட்டும் 2 டன்களைத் தாண்டுவதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.