61 வது சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதம நீதியரசர் கலந்து கொள்ளாதது அரசு நீதித்துறையை மதிக்கவில்லை என்பது தெளிவு

இலங்கையின் 61 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கலந்துகொள்ளவில்லை என்பதை நினைக்கும்போது அரசாங்கம் நீதித்துறையை சிறிதும் மதிக்கவில்லை என்பதை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இலங்கை அரச நிர்வாகக் கட்டமைப்பில் மூன்றாம் தரப்பினராகக் கருதப்படும் நீதிமன்றத் துறையின் உயர் பதவியை வகிக்கும் நாட்டின் முக்கிய குடிமகனான சரத் என் சில்வா தேசிய தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.

பிரதம நீதியரசர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமைக்கு காரணங்கள் எதுவும் கூறப்படாத போதிலும், அண்மைக்காலகமாக நிறைவேற்று அதிகார முறைக்கும், நீதித்துறைக்கும் இடையில் கடுமையான பனிப்போரொன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.